உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qiiagrqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த கோல்டு கார்டு புதிதாக குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) விற்கப்படும். இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: இது குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்த கோல்டு கார்டு வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள். கோல்டு கார்டு விற்பனை இரண்டு வாரங்களில் துவங்கும். இதை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Pandi Muni
பிப் 26, 2025 20:00

ப்பூ அவ்வளவுதானா? கட்டுமர கும்பல் பல லட்சம் கோடிகளை பதுக்கி வச்சிருக்கு. ஒரு நாள் அந்த கும்பல் அமெரிக்காவில் வந்து பதுங்கும்


Sampath Kumar
பிப் 26, 2025 17:41

இது ஹான் முதலாளித்துவத்தின் திமிர் என்பது ஏற்கனவே முக்கிய பணிகள் செய்ய ஆட்கள் இல்லை இப்போ இது வேற அமெரிக்கா நாறுவது உறுதி


Jay
பிப் 26, 2025 17:31

வசதி இருக்கிறவனுக்கு அமெரிக்காவே சிவப்பு கம்பளம் இருக்கிறார்கள். இங்கு அரசியலில் இருப்பவர்கள் கொள்ளை அடித்த பிறகு 5 மில்லியன் டாலர் என்பது மிகக் குறைந்த பணம், குடும்பத்துடன் போய்விடுவார்கள்.


Subbu
பிப் 26, 2025 17:19

தி மு க - காரன் எல்லாம் அமெரிக்கா போகப் போறாநுக


Balamurugan
பிப் 26, 2025 13:35

ஏற்கனவே அமெரிக்காவில் வேலை செய்ய ஆளில்லை


MUTHU
பிப் 26, 2025 13:29

இங்க காசடிச்சு பதுக்கி வைத்திருப்பவன் எல்லாம் இப்போ வயிறு எறிஞ்சுட்டு நிர்மலா சீத்தாராமன் மேல கடுப்புல இருப்பான்.


ராமகிருஷ்ணன்
பிப் 26, 2025 12:52

பணம் இருந்தா அமெரிக்காவுக்கு வா, இல்லாவிட்டால் பாக்கிஸ்தானுக்கு போ என்று சொல்ராரு. அவனவன் நாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அமெரிக்கா கொண்டு வந்து கொட்டு, ஜாலியாக இருந்து கொள். நாடா இல்லை 5 ஸ்டார் ஓட்டலா.


Ramesh Sargam
பிப் 26, 2025 12:50

பேசாம "அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கு" என்று டிவி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கலாம். ஒருவருக்கு 5 மில்லியன் டாலர். அதே இரண்டு நபர்கள் குடியுரிமை வேண்டுமென்றால் 8 மில்லியன் டாலர் என்று கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுக்கலாம்.


Karthikeyan
பிப் 26, 2025 12:00

, பணக்காரன் 43கோடி குடுத்து 4000கோடி அட்டாய போற்றுவன். உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசத்துடன் இருப்பது பாலா போன இந்த மிடில்கிளாஸ் தான்


Kasimani Baskaran
பிப் 26, 2025 11:50

போகலாம் என்று இருக்கிறேன்.. ஆனால் பணம்தான் இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை