உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

ஜப்பான் உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற மறுநாளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அதேநேரத்தில் அவர் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது, ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும். இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும். ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்தோனேசியப் பொருட்களுக்கு 18% வரியும் விதிக்கப்படும். கூடுதல் வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும். இது போன்ற ஒப்பந்தம் இதற்கு முன் போடப்பட்டது கிடையாது. இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம், குறிப்பாக ஜப்பான் நாட்டுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SUBRAMANIAN P
ஜூலை 23, 2025 13:52

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலை. சும்மா காதுக்குள்ள வந்து கொய்ங்....னு சவுண்டு உடுது.


MUTHU
ஜூலை 23, 2025 08:51

இனி அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா-ஜப்பான் பொருட்கள் சீன நிறுவனங்களுக்கு போட்டியிடும் சல்லிசான விலையில் உலக சந்தையினை ஆக்கிரமித்து விடும். ஜப்பான் நிறுவனங்கள் சீனாவினை விட்டு அடுத்த பத்தாண்டுகளில் முற்றிலும் வெளியேறி விடும்.


MUTHU
ஜூலை 23, 2025 08:45

சீன மற்றும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்த சூட்சுமம் இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் தொழிலினை செய்வதற்கு எதுவாக மற்ற நாட்டு கதவுகளை டிரம்ப் அடைத்துள்ளார். இனி அமெரிக்காவிலிருந்து தொழில் செய்யும் ஜப்பான் தனது உற்பத்தி பொருட்களை சீனாவினை விட சொற்ப விலைக்கு மார்க்கெட் செய்யும்.


Srinivasan Narayanasamy
ஜூலை 23, 2025 07:43

நம்பிட்டோம் தலைவா. ஜப்பான் நாடும், ஜப்பான் மக்களும் இன்னும் அமெரிக்காவை மறக்கவில்லை. ஹிரோஷிமா மேலும் நாகசாகி, August 6 and August 9, 1945. நீங்க சும்மா அடிச்சிவிடுங்க அதிபரே..


SANKAR
ஜூலை 23, 2025 08:39

world did not forget what Japanese army did to Chinese and Korean civilians either and Japan continuing war even after Hirlers and Mussolinis death.Onky atom bombs stopped more atrocities by Japan


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை