உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு வரி வசூலிப்புக்கு புதிய துறை; அறிவித்தார் டிரம்ப்

வெளிநாட்டு வரி வசூலிப்புக்கு புதிய துறை; அறிவித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாட்டினரிடம் இருந்து வரி வசூலிப்பதற்கு புதிய துறை தொடங்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் நியமனம் செய்து முடித்துவிட்டார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூறி இருப்பதாவது: மிக நீண்ட காலமாக, உள்நாட்டு வருவாய், வரி வசூல் சேவையை மட்டுமே நம்பியுள்ளோம். இந்த சூழல் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெளி நாட்டு வருவாய் சேவையை உருவாக்குவேன் என்று இன்று அறிவிக்கிறேன். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கத் தொடங்குவோம். இதற்கு புதிய துறை ஒன்றை உருவாக்க இருக்கிறோம். வரும் ஜனவரி 20ம் தேதி அன்று, வெளிநாட்டு வருவாய் சேவை செயல்பாட்டுக்கு வரும். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜன 15, 2025 17:00

இங்கே ஜி.எஸ்.டி, இன்கம்டாக்ஸ்னு பல்துறைகள் இருக்கு. எதுலயும் ரூல்ஸ் சரியா இருக்காது. அதிகாரிங்க படிச்சுட்டு என்பத்த புரிஞ்சிக்கறாங்களோ அதுதான் சட்டம்.


SUBBU,MADURAI
ஜன 15, 2025 15:05

USA Governments doesn't matter if they are Republicans or Democrats is, that they are just focussed on USA power positioning. India is an ally of US but also a threat because of it's rising economy and it's rising political power in the South East. Working together is ok for USA but they always want to have the front seat.


GMM
ஜன 15, 2025 14:59

அமெரிக்கவுடன் வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்தால் கட்டணம். பணம் இழந்தால் நஷ்ட ஈடு கிடைக்குமா? லட்சம் கோடிக்கு கடத்தல், போதை கள்ள வர்த்தகம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதற்கு வரி, கட்டணம் எதுவும் கிடையாது. முதலில் அதனை குறைக்க அமெரிக்கா முயற்சிக்க வேண்டும். இயற்கையில் பூமியில் கிடைக்கும் பெட்ரோல் போன்ற பொருளுக்கு பண்டமாற்று முறையை உலகம் ஏற்க வேண்டும்.


babu
ஜன 15, 2025 14:21

வெளிநாட்டு வாழ் நம் இந்திய பிள்ளைகளா எல்லோரும் ஓடி வந்து விடுங்கள் நம் தாய் நாட்டிற்க்கு. இவன் உங்களை பிழிந்து வரி வாங்கி வாங்கி கொன்று விடுவான்.


stb
ஜன 15, 2025 17:07

correct


Ramesh Sargam
ஜன 15, 2025 13:09

அதிபர் இருக்கையில் அமர்வதற்கு முன்பே பல அறிவிப்புக்கள். அமர்ந்தபிறகு இருக்கு கோரத்தாண்டவம்...


Rangarajan Cv
ஜன 15, 2025 12:18

As US is a dominant importer of Goods


MARI KUMAR
ஜன 15, 2025 10:58

டொனால்ட் டிரம்ப் வேற லெவல் ஆட்டம் ஜனவரி 20 யின் துவக்கம்


சமீபத்திய செய்தி