வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சமமான வாய்ப்பு, சிறுபான்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வேலை - அது சிலநேரங்களில் திறமை சாலிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி 24/7 கவனிக்க வேண்டிய ஏர்போர்ட் இது. கூடுதல் மனித வளம் வேண்டும். ஆனால் குறைவானவர்கள் என்றால் வேலைப்பளு தவறு செய்ய வைக்கும். அதுதான் நடந்து இருக்கிறது.
மற்றவர்கள் சொல்ல தயங்கும் விசயங்களை டிரம்ப் போடீர் போடீர்னு போட்டு உடைக்கிறார். அந்தந்த தொழிலில் படித்த சிறந்த ஆட்களை நியமிக்காமல், நம்ம ஊரு மாதிரி கோட்டால நியமிச்சா அமெரிக்காவும் இந்தியா போலத்தான் ஆகும். சீனா அளவுக்கு இந்தியா ஏன் முன்னேறவில்லைனு சில அறிவிலிகள் கேக்குதுங்க. என்னைக்கு இட ஒதிக்கீடுன்னு, திறமைசாலிகளை அமெரிக்காவுக்கும் பிறநாடுகளுக்கும் அனுப்பிவச்சோமோ, அன்னைக்கே இந்தியாவோட கதை முடிஞ்சிச்சே
நம் நாட்டைப் போலவே கண்டபடி ரிசர்வேஷன் அங்கேயும் உள்ளது தரத்தில் குறைவான வேலையாட்கள் விமானப்போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் ஆக நியமிக்கப் பட்டுள்ளனர் என்பதே டிரம்பின் வாதம் அதைக் களை எடுக்கவே முனைகிறார் இப்போது
அவார்ட் என்ன சொல்ல வரார் ன்ன இங்க தமிழ்நாட்டில் தகுதி இல்லத இட ஒதுக்கீட்டில் வந்த கூமுட்டை அரசாங்க அதிகாரிகளால் மண் தண்ணீர் இயற்க்கை வளங்கள் கொள்ளை போவது போல விமான துறையில் இட ஒதுக்கீடு மூலம் வந்த திறமை இல்லாத அதிகாரிகளால் விபத்துகள் நடக்கிறது என்கிறார் கணம் உடன் பிறப்புகளே
எல்லா அரசியில்வியாதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
இந்திய அரசியல்வாதியாகி விட்டார் ட்ரம்ப்.. விமான விபத்துக்கும் பைடனுக்கும் என்ன சம்பந்தம்???
தடுக்கி விழுந்தால்கூட காங்கிரசை குறை சொல்லியே ஆட்சி செய்பவர்களும் உண்டு.
உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என்று சொல்கிறேன் என்று ஒரு அறிவார்ந்த கருத்துமொழி உண்டு. ட்ரம்பின் ஆசிய நண்பர் யார் என்று இருவரும் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
நம்ம ஊரு அரசியல்வாந்திகளையே தூக்கி சாப்பிட்டுட்டாரு ட்ரும்பு . அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடறாரு.
பார்க்கும் போது இந்திய அரசியலை விட மகா மட்டமான நிலைக்கு அமெரிக்க அரசியல் சென்றதையே அவருடைய கூற்று காட்டுகிறது. இவருடைய செயல்பாடுகள் சில தமிழ்நாடு முன்னாள் முதல்வரையும் இந்திய மட்டமான அரசியல்வாதிகளையும் நினைவு படுத்துகிறது. கண்டிப்பாக நான்கு வருடத்திற்க்குள் இவர் எப்போது ஆட்சியை விட்டு போவார் என்ற மனநிலைக்கு மக்களை மாற்றிவிடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தமிழ் நாடு இந்நாள் முதல்வரையும் சேர்த்துக்கோங்க. அவரு கோபிச்சுக்கப்போறாரு.