உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்த புடினுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும்; ஜெலன்ஸ்கி நம்பிக்கை

போரை நிறுத்த புடினுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும்; ஜெலன்ஸ்கி நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: போரை நிறுத்த ரஷ்ய அதிபருக்கு, டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கி வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை துவங்க, ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார். இது குறித்து நடந்த மியூனிக் மாநாட்டில், ஜெலன்ஸ்கி பேசியதாவது: ரஷ்ய அதிபரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். போரை நிறுத்த ரஷ்ய அதிபருக்கு, டிரம்ப் அழுத்தம் கொடுக்க முடியும். அவரால் அதை செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
பிப் 15, 2025 13:08

போரை நிறுத்த ரஷ்யாவுக்கு காசு தேவை. ஆயில் விற்ற பணத்தை போரில் செல்வழிச்சாச்சு. எக்கானமி அதில் பாதாளத்தில். ட்ரம்ப் காசு குடுத்தா போர் நிக்கிம்.


அப்பாவி
பிப் 15, 2025 10:33

போருக்குத்தேவை காசு. அடிமாட்டு விலைக்கு ஆயில் வாங்கி ரஷ்யாவுக்கு உதவி செய்கிறோம். நாம இல்லைன்னா சீனா. சீனா இல்லேன்னா வேற யாராவது புட்டினுக்கு ஆதரவு தருவாங்க. ஆருயிர் நண்பர்


M Selvaraaj Prabu
பிப் 15, 2025 10:16

அழுத்தம் இல்லை சாமி. நெருக்கடி. எத்தனை தடவை சொல்றதோ ?


ngopalsami
பிப் 15, 2025 10:05

பைடனும், நேட்டோ நாடுகளின் பேச்சை கேட்டு தவறான வழி நடத்தலால் செழிப்புடன் இருந்த நாட்டை தரை மட்டமாக்கிவிட்டு இப்பொழுது ட்ரம்ப் இடம் கூப்பாடு போடுவது ஏன். சற்று சிந்தித்து ரஷியாவிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி காரியத்தை முடித்திருக்கலாம். உக்ரேனும், மக்களும் நிம்மதியாக இருந்திருப்பார்கள். கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன்.


Srinivasan Krishnamoorthy
பிப் 15, 2025 10:31

Biden and the deep state d the war thru zelensky.that s why Trump says it was a needless war. they thought they could destroy russian s economy, it became other way around adharma will not last long


பேசும் தமிழன்
பிப் 15, 2025 09:31

ஜெலன்ஷ்கி.... உன் நம்பிக்கையை தூக்கி குப்பையில் போடு.... உலகநாடுகள் எதற்க்கு உங்கள் சண்டையை நிறுத்த வேண்டும் ???


RAJ
பிப் 15, 2025 08:37

காமெடி பீசு... நல்ல இருந்த நாட்டை நாசம் பண்ணிட்டு.. .. என்னப்பா இது.. உக்ரைனை ரஷ்யகிட்ட விட்டுட்டு ஓடிப்போய்டு ராசா..


Oviya Vijay
பிப் 15, 2025 08:30

இதுவரைக்கும் மோடி நினைத்தால் ஒரு நிமிடத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் அப்படியெல்லாம் பில்டப் கொடுத்தது எல்லாம் பொய்யா கோபால்... மோடியும் புடினும் அவ்ளோ பிரண்ட்ஸ் அப்படின்னு எல்லாம் பீலா விட்டீங்களே பா... வருஷக் கணக்குல போர் நடந்துகிட்டே தான் இருக்கு... ஆனா முடிவுக்கு வந்த மாதிரியே தெரியல... இவங்களோட ஈகோ பிரச்சனையினால இருதரப்பிலையும் லட்சக்கணக்கான உயிர்கள் போனது தான் மிச்சம்...


கிஜன்
பிப் 15, 2025 08:19

அரசனை நம்பி புருசனை கைவிட்டா இப்படித்தான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை