உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.உக்ரைன் மீது 2022 பிப்.,ல் ரஷ்யா தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mahnw17i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் சமீபத்தில் இரு நாடுகளும் பேச்சு நடத்தின. அதில் முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் 117 ட்ரோன்களை ஏவி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவின் 30 போர் விமானங்கள் சேதமடைந்தன. மேலும் ரஷ்யா - கிரீமியாவை இணைக்கும் பாலத்தையும் குண்டுகள் வைத்து தகர்த்தது.இந்த சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். அதன்பின் வெளியிட்டுள்ள செய்தியில்,'உக்ரைனின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். அதனால் இரு தரப்புக்கும் இடையே தற்போதைக்கு போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை' என அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JayaSeeli
ஜூன் 05, 2025 16:32

நீ ஏன் நடுவுல கூவிக்கினே இருக்க ? ஓரம் போ


naranam
ஜூன் 05, 2025 15:16

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பது மட்டும் அமெரிக்க அதிபருக்குப் பிடிக்கவில்லையாம்! தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை வேடம் போடும் அமெரிக்கா..


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 13:07

அடுத்ததாக சமாதானப் புறா டிரம்ப் ராமதாஸ் அன்புமணியிடையே போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுவார்.


Anand
ஜூன் 05, 2025 11:40

நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் புடின் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார், நரி வேலை செய்யும் உனக்கும் சேர்த்து...


Barakat Ali
ஜூன் 05, 2025 09:37

பதிலடி கொடுங்கன்னு சொல்லாம சொல்றாரு. அமெரிக்கா என்னைக்குமே இப்படித்தான்...


SUBBU,MADURAI
ஜூன் 05, 2025 09:09

பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது அமெரிக்காவுக்கு கைவந்த கலை. சமீப காலமாக ட்ரம்பின் நடவடிக்கை சரியில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை