உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்; அடித்து சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்; அடித்து சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பைப் பாராட்டினார். அவர், 'அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்' என்று கூறினார்.அமைதிக்கான நோபல் பரிசு இன்று அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நார்வே நாட்டைச்சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம் யாருக்கு பரிசு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். 'இதுவரை ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும்' என்கிறார் அவர். 'எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என வெளிப்படையாக பேசியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிரம்புக்கு கிடைக்குமா?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர் பெயர் நாளை அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது, தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் டிரம்ப் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் விடை இன்று மதியம் 3 மணிக்கு தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பா மாதவன்
அக் 10, 2025 08:50

இந்த ஆளுக்கு நோபல் பரிசு மட்டும் இந்த வருஷம் கொடுக்காமல் இருந்து பாருங்கள். அவரது உண்மையான முகம் வெளியே வரும். இந்த ஆளுக்கு நோபல் பரிசு கொடுத்து அதன் மதிப்பை இழந்து விடக் கூடாது. அமெரிக்காவை படு பாதாளத்தில் தள்ளுவதற்காகவே ஆட்சிக்கு வந்தவர். நம்ம ஊர் விடியலிடம் முறையாக பாடம் எடுத்துக் கொண்டால், நிச்சயம் நோபல் பரிசு இவரை தேடி வரும்படி சொல்லிக் கொடுப்பார். ஈரை பேனாக்கி, பேனை பெரிதாக, பெரியானாக காட்டக் கூடிய சர்வ வல்லமை கொண்டவர் நம்ம விடியல். இவருக்காக தான் நம்மவர் விட்டுக் கொடுக்கிறார் போலும்.


Nathan
அக் 10, 2025 08:07

ஆயுத வியாபாரிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசா இதை விட அந்த நோபல் பரிசுக்கு அவமானம் ஏதும் இல்லை


Field Marshal
அக் 10, 2025 07:50

அமைதிக்கான விருது புடின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவருக்கும் அளிக்கலாம்


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 05:22

அடுத்த லிஸ்டில் எங்கூரு பாரு , ஆப்பு தாண்டி


Kasimani Baskaran
அக் 10, 2025 04:05

நோபல் பரிசு என்ன பரிசு... டிரம்ப் சமாதானப்பரிசு என்று ஒன்றே புதிதாக ஒன்றை உருவாக்கி கொடுக்கலாம்..


Vasan
அக் 10, 2025 00:50

அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை தற்காலிகமாக ஒரு 5 வருடங்களுக்கு நிறுத்தி விடலாம். உலகில் அமைதி திரும்பட்டும்.


சமீபத்திய செய்தி