உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு

யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.யு.எஸ்.எய்டு அமைப்பு சர்வதேச அளவில் மனிதாபிமான அடிப்படையில் ஆன பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்கிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் ஆண்டு பட்ஜெட் நான்கு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் (50 பில்லியன் டாலர்). தற்போது இந்த அமைப்புக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டது.டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ், இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். தடை நீக்கப்பட்ட உத்தரவு வந்த நிலையில், 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார்.இது குறித்து டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யு.எஸ்.எய்டு) 2,000 பதவிகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய பதவிகளில் உள்ள ஒரு சிலரை தவிர மற்ற அனைவரைக்கும் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
பிப் 24, 2025 17:09

எனக்கு வாட்சப்பில் வந்தது US Dollar 544,057,634 - Freedom House US Dollar - 16,226,383 - Doc society, ................... ஒரு நீண்ட லிஸ்ட் உள்ளது தமிழ் சர்தார்ஜி, முஸ்லீம், க்ரித்துவ குரூப் பல உள்ளது


jayvee
பிப் 24, 2025 16:24

நக்கி முதல் சவுக்கு வரை, JNU போல சில பல பலகலை சட்ட கல்லூரிகள் என்று பல இடங்களில் இவர்களின் ஆதிக்கம் இன்றும் உள்ளது .. கிருத்துவ சீன கம்யூனிச முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இதில் அடக்கம் .. வை முதல் கோ சுத்திமுதல் அருவாள் வரை பலரும் பல பெறுகின்றனர் .. இத்தாலிய கட்சி தான் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய மிஸ்சனரிகள் தாங்கள் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய நிதியின் மூலாதாரம் இதுதான்.. ஏற்கனவே மோடி வைத்த ஆப்பே தாங்கமுடியவில்லை என்று நரிகளும் ஒட்டகங்களும் கதறிக்கொண்டிருக்க இது வேறு


Sivagiri
பிப் 24, 2025 12:54

அந்த பெயர் லிஸ்ட்-ம் குடுத்தா நல்லா இருக்கும் , எந்த கம்னாட்டி இந்தியாவில் , என்ன வேலை செஞ்சிச்சுன்னு கண்டு புடிச்சிரலாம் . ..


sankaran
பிப் 24, 2025 11:38

மத மாற்ற பிசினஸ் கிளோஸ்.. டிரம்புக்கு மிக்க நன்றி...


ஆரூர் ரங்
பிப் 24, 2025 10:44

அடுத்ததா இந்தோநேசியாவில் ஆட்சியைக் கவிழ்க்க கலவரம். பின்னணியில் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியண்ணன் நாதசு திருந்த வாய்ப்பேயில்லை.


ஆரூர் ரங்
பிப் 24, 2025 10:41

ஜேட்லி ஒன்றை அழகாகக் கூறினார்.. அமெரிக்க மக்கள் தங்களுக்கு மட்டும் தூய்மையான ஜனநாயகம் தேவை. ஆனால் மற்ற நாடுகளில் ஜனநாயகமே இல்லாமல் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை சர்வாதிகார அரசுகளே இருக்க வேண்டும் என எண்ணும் இயல்புடையவர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு டாலர் தர்மத்துக்கு பின்னும் பெரும் சுயநலத்திட்டம் இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 13:36

அருண் ஜேட்லியைத்தான் சொல்றீங்க ன்னு நினைக்கிறேன் ... அவர் ஒண்ணாம் நம்பர் ஃப்ராடு .....


Nellai tamilan
பிப் 24, 2025 09:49

முந்தைய பிடன் அரசின் பித்தலாட்ட நடவடிக்கையில் ஒன்று இந்த யு எஸ் எய்டு நிறுவனம். மத்திய கிழக்கு நாடுகளில் பிரிவினைவாதிகளுக்கு உதவி, தீவிரவாதிகளுக்கு நிரோத் வாங்கினது, சுன்னத் கல்யாணம் பண்ணியது, ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பத்தை உண்டாக்கியதுனு இவனுங்க புடுங்கின ஆணி எல்லாமே தேவை இல்லாத ஆணி.


Jay
பிப் 24, 2025 09:44

இங்கு பலமான ஆளும்கட்சி அமைவதை அமெரிக்காவோ எந்த மேற்கு நாடுகளோ ஒத்துக் கொள்ளாது. இங்கு திறன் இல்லாத கூட்டணி கட்சி அமைவதையே வெளிநாடுகள் விரும்புகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தேவையானதை இங்கு எளிதாக லாபி செய்வார்கள். இந்திய மக்களுக்கு எதிரான விஷயத்தை இந்திய அரசையே பண்ண சொல்லி வலியுறுத்துவார்கள். பிஜேபி போன்ற வலதுசாரி கட்சி அதுவும் முழு மெஜாரிட்டியுடன் இருப்பது அமெரிக்கா மற்றும் சைனா ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்காது தான். இதை சீர்குலைக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். வெளியில் வந்தது என்னமோ இந்த ஒரு விஷயம் தான்.


yts
பிப் 24, 2025 09:19

சிலருக்கு அபார கற்பனைஉள்ளது அதில் இங்கு பதிவுத்துள்ளார்


நல்லதை நினைப்பேன்
பிப் 24, 2025 09:00

நரி அப்படி இல்லையாம். இவைகள் வின்சி கும்பலுக்கு அனுப்பி வைத்து, அவைகள் மூலம் ஒட்டு எண்ணிக்கை அதிகப்படுத்தி, மோடியை தோற்கடிக்க திடடமாம். சொல்லுறாங்க.


புதிய வீடியோ