உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டாலர் தான் ராஜா; அதை அழிக்க பிரிக்ஸ் அமைப்பு முயற்சிக்கிறது; அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

டாலர் தான் ராஜா; அதை அழிக்க பிரிக்ஸ் அமைப்பு முயற்சிக்கிறது; அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது டாலரை சீரழிக்கவும் அமைக்கப்பட்டது.

அழிக்க முயற்சி

டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம். அதற்கு சவால் விட விரும்பினால், அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்களில் யாரும் அந்த விலை கொடுக்க தயாராக இருப்பதாக நான் நினைக்கவில்லை. டாலருக்கு சவால் விடும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு வருடம் முன்பும் நான் சொன்னேன்.

உலகப் போர்..!

பிரிக்ஸ் பெரும்பாலும் பிரிந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அவற்றில் சில சுற்றித் திரிகின்றன. பிரிக்ஸ் ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்பது என் கருத்து. உங்களிடம் ஒரு புத்திசாலி அதிபர் இருந்தால், நீங்கள் ஒருபோதும் தரத்தை இழக்க மாட்டீர்கள். முந்தைய ஜனாதிபதியைப் போன்ற ஒரு முட்டாள் உங்களிடம் இருந்தால், நீங்கள் தரத்தை இழப்பீர்கள். உங்களிடம் இங்கே டாலர்கள் இருக்காது. உலகத் தரமான டாலரை நாம் இழந்தால், அது ஒரு உலகப் போரில் தோற்றது போன்றது. புதிய வரி விதிப்புகளின்படி, ஆகஸ்ட் 1ம் தேதி 2025ம் ஆண்டு முதல் வரிகள் வந்து குவியும். இந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சூரியா
ஜூலை 09, 2025 16:26

கரன்சி என்பதே கடன் வாங்கும்பொழுது தரும் பிராமிசரி போன்றது. உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது என்றால், அந்தந்த நாட்டிற்கு அமெரிக்கா கடன்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம். அமெரிக்கா டாலருக்கு மாற்றான பணப்பட்டுவாடா முறைபற்றிப் பேசும் எந்த நாட்டையும் அதனால்தான் விட்டுவைப்பதில்லை. ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.


krishnan
ஜூலை 09, 2025 15:51

பைத்தியக்கு வைத்தியம் பார்க்கும் நல்ல டாக்டரின் சேவை அவசர தேவை அமெரிக்காவுக்கு நல்லது, இல்லையேல் அமெரிக்காவை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்


Murthy
ஜூலை 09, 2025 14:57

வரி விதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ....மாற்று சந்தையை நோக்கி வருவார்கள் . .......அமெரிக்க கதி அதோ கதிதான் .....டாலர் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை


Baskaran
ஜூலை 09, 2025 13:53

ஆம் நீங்கள் சொல்வது 100% உண்மை இந்தியா மிக பெரிய சந்தை அமெரிக்காவிற்கு இருந்தும் அடிமையாக்க நினைக்கிறது மற்ற நாடுகளையும் சேர்த்து விழித்துக்கொள்ளும் நேரம் இது...


Nagarajan D
ஜூலை 09, 2025 11:12

டாலர் மட்டுமல்ல அமெரிக்காவும் ஒழிந்தால் தான் உலகம் உய்யும்...


Narayanan
ஜூலை 09, 2025 11:11

டாலர்களை பேப்பரில் அச்சிட்டுக்கொண்டே இருந்தால் ராஜாவா ? அமெரிக்காவின் இந்த எண்ணத்தை மாற்ற உலகநாடுகள் ஒன்று இணையவேண்டும் .


Karthik Madeshwaran
ஜூலை 09, 2025 10:51

அமெரிக்கா பொருளாதாரம் மிக பெரிய கடனில் இருக்கிறார்கள். டாலரை இஷ்டத்துக்கு அச்சிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் உட்கார்ந்து சம்பாதிக்கிறார்கள். காரணம் உலக ஏற்றுமதி இறக்குமதி தொழிலும் , ஆன்லைன் டிரேடிங் எல்லாம் அமெரிக்க டாலரில் நடப்பதனால் மட்டுமே. இதற்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்தால் மட்டுமே அமெரிக்காவின் ஆணவத்தை அடக்க முடியும். இல்லையேல் நம் தட்டில் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை எங்கோ உள்ளஅமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தீர்மானித்து கொண்டிருப்பான். எதிர்க்க வேண்டிய இடத்தில, கட்டாயம் எதிர்க்க வில்லை என்றால் பிற்காலத்தில் அடிமையாக தான் ஆக வேண்டும்.


Karthik Madeshwaran
ஜூலை 09, 2025 10:43

உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய சந்தையும் இந்தியா தான். ஆனால் நமது பலம் நமக்கே தெரியாமல் அடிமை பட்டு கிடக்கிறோம். நமது வெளியுறவு கொள்கை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது. அமெரிக்காவிற்கு அடிமை சாசனம் எழுதி மட்டும் தான் கொடுக்க வில்லை


KRISHNAN R
ஜூலை 09, 2025 10:36

எங்கே போய் கொண்டு இருக்கு..... இந்த வண்டு முருகன்..


P. SRINIVASAN
ஜூலை 09, 2025 10:13

தரம்கெட்ட கருத்துகள் கூறுவது டிரம்புக்கு வாடிக்கை ஆகிவிட்டது.


புதிய வீடியோ