உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு திட்டம்: ஒரே நாளில் விசா வாங்கிய ஆயிரம் பேர்!

டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு திட்டம்: ஒரே நாளில் விசா வாங்கிய ஆயிரம் பேர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தை, முதல் நாளே ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது.சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு விசா திட்டம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்இதன்படி புதிதாக குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) கோல்டு கார்டு விற்கப்படும். இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் கோல்டு கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்டு கார்டு வாங்குவதற்காக வரிசை கட்டி நிற்கின்றனர். இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sathyan
மார் 25, 2025 01:29

மக்கள் எதை விற்றாலும் வாங்குவர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. டிரம்ப் அவர்கள் இந்த வகையிலும் பணத்தை ஈர்க்க முடியும் என்பதை காட்டியுள்ளார். அந்த அளவுக்கு அமெரிக்கா பித்து மக்களிடையே உள்ளது.


சகுரா
மார் 25, 2025 00:45

அவர்களில் 80 சதவீதம் அரசியல்வாதிகளின் பினாமியாக இருப்பார்கள்


ஜெய்ஹிந்த்புரம்
மார் 25, 2025 00:27

போதை மருந்து வித்து பணக்காரன் ஆனவன் எல்லாம் பணத்தை கட்டி பச்சை அட்டை வாங்கிடுவானுங்க.


Murugesan
மார் 24, 2025 23:19

Its not even become a law yet.


rukmani
மார் 24, 2025 23:06

பக்கா வியாபாரி.


Appa V
மார் 24, 2025 22:42

பத்துகோடியை fixed deposit பண்ணினாலே இந்தியாவில் சவுகரியமாக வாழலாம்


karupanasamy
மார் 25, 2025 03:01

கழகக்கயவர்கள் சும்மாவிட்டுவிடுவார்களா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை