உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் கோல்டு கார்டு விசா : புதிய திட்டம் அறிமுகம்

டிரம்ப் கோல்டு கார்டு விசா : புதிய திட்டம் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 'டிரம்ப் கோல்டு கார்டு' என்ற விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பெருமளவு பணம் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவில் விரைவாக குடியேற்ற உரிமை பெற வழிவகை செய்கிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

டிரம்ப் கோல்டு கார்டு என்பது, அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் செல்வந்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியிருக்கும் உரிமை வழங்குகிறது.இதன் நோக்கம், நாட்டிற்கு வருவாயை ஈட்டுவதும், தற்போதுள்ள இபி1 மற்றும் இபி2 விசாக்களுக்கு பதிலாக ஒரு புதிய வழியை உருவாக்குவதாகும். இந்த கோல்டு கார்டு விண்ணப்பங்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் மூன்று வகைகளை கொண்டுள்ளன.1.தனிநபர் கோல்டு கார்டுஅமெரிக்க கருவூலத்துக்கு இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய் பரிசாக வழங்க வேண்டும். மேலும், இதற்காக விண்ணப்பிப்போர் திரும்ப பெற முடியாத, பரிசோதனை மற்றும் செயலாக்க கட்டணமாக 15,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். 2. நிறுவன கோல்டு கார்டுஒரு நிறுவனம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிதியுதவி செய்ய இது அனுமதிக்கிறது. ஒவ்வொரு பணியாளருக்கும் இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும். நிறுவனங்கள், குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்தி, ஒரு பணியாளரின் குடியுரிமையை மற்றொரு பணியாளருக்கு மாற்றிக் கொள்ளலாம்.3. பிளாட்டினம் கார்டுஇது மிக உயர்ந்த அளவிலான விருப்பமாகும். இதற்காக விண்ணப்பிப்போர் 43 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும். இக்கார்டை வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் 270 நாட்கள் வரை தங்கலாம். அமெரிக்காவுக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இத்திட்டத்துக்கு அமெரிக்க பார்லிமென்டின் ஒப்புதல் தேவை என்பதால், இது இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் அமெரிக்காவுக்கு கணிசமான வருவாயை ஈட்டவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது. இருப்பினும், இத்திட்டம் சட்ட சவால்களை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

visu
செப் 21, 2025 15:44

ஒருவன் கோடிஸ்வரன் என்றால் அங்க ஏன் போக போறான் திருடிட்டு ஓடும் அரசியவாதி தவிர


Karthi Natraj
செப் 21, 2025 12:11

டிரம்ப் ன் இந்த திட்டம் மிக அருமை அதிலும் மூன்றாவது திட்டம் வேற லெவல், இதை பயன்படுத்தி பாக் தனது பாசமிகு நண்பர்களை அமெரிக்க குடியுரிமை வாங்க வசதியாக இருக்கும்.


வாய்மையே வெல்லும்
செப் 21, 2025 09:57

கோல்ட் கார்டு விசா வாங்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இல்லை. நடையை கட்டி அடுத்த நாட்டு மக்களிடம் பம்மாத்து விசா விற்று பிச்சை எடுங்க ட்ரம்ப் சார். உங்களோட மவுசு இனிமே அதல பாதாளம் தான்.


Kalyanaraman
செப் 21, 2025 08:02

போரப்போக்க பாத்தா டிரம்ப் ரெண்டு வருஷம் கூட தாங்க மாட்டார் போல இருக்கே.


Kennedy
செப் 21, 2025 07:56

Perhaps insolvency threats forced the American government to enhance/introduce their taxes.


Thravisham
செப் 21, 2025 07:43

தமிழக திருட்டு த்ரவிஷன்களின் மொத்த குடும்பமும் அமெரிக்கா செல்வது உறுதி. வாழ்க டிரம்ப்


Senthoora
செப் 21, 2025 07:29

இதைவிட அமெரிக்காவை வைத்துவிடலாம். திரும்புக்கு தெரியல பல ஆயிரம் பணக்காரர்கள் அமெரிக்காவில் இருக்க முடியாமல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வர விண்ணப்பித்து அந்தநாட்டு குடிவரவு இலாகா விண்ணப்பங்களை பரிசீலித்து விசா வழங்க முடியாமல் திணறுது. எட்கேனவே பலர் வந்துட்டாங்க.


Naga Subramanian
செப் 21, 2025 07:28

இதையே பாரதத்திலும் அமல் படுத்தினால், அழிவது அமெரிக்கா என்பது உறுதி.


Ravi Kumar
செப் 21, 2025 07:19

அமெரிக்கா சரியாய் ஓர் மெண்டல் கிட்ட மாட்டிக்கிச்சு .......


KOVAIKARAN
செப் 21, 2025 07:14

குரங்கைப்போல இவரது மனம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. எனவே இவரை நம்பி இனிமேல் எந்த நாட்டவரும் கோடிகளைக் கொட்டிக்கொடுத்து அமெரிக்காவிற்கு சென்று ஏமாறமாட்டார்கள். கிரிமினல்களும், போதை மருந்து கடத்தல்காரர்களும், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் தான் போகமுடியும். இந்த திட்டமும் தோல்வியே அடையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை