உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்

மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 3வது முறையாக அதிபராக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார். அவர், நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி வாகை சூடினார். இதனால் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிபர் ஆக இருந்த டிரம்ப் தோல்வியை தழுவினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ciy2ec9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று, 2வது முறையாக அதிபர் ஆனார். 3வது முறை அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்கா தேர்தல் விதிப்படி படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டி:3வது முறையாக அதிபராக வர வேண்டும். நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே அதிபராக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது. இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2வது அதிபர் பதவி காலம் மீது வைத்துள்ளேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
மார் 31, 2025 18:06

உண்மை ..... மக்கள் ஆதரவு, நம்பிக்கை இல்லாவிட்டால் எப்படி மூன்றாவது முறை அதிபராக / பிரதமராக முடியும் ????


Sampath Kumar
மார் 31, 2025 17:18

எங்க போல தான்


Ramesh Sargam
மார் 31, 2025 12:42

மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் என்று ஒரு பழைய திரைப்பட தமிழ் பாட்டு ஞாபகம் வருகிறது. அதுபோல இந்த டிரம்ப். சொல்லமுடியாது சாதிச்சுடுவார். வாழ்த்துக்கள்.


Premanathan Sambandam
மார் 31, 2025 11:14

அண்ணன் அதிர்ஷ்டக்காரர் நடந்தாலும் நடக்கும்


Ganesh
மார் 31, 2025 10:25

நீங்க இப்போ பண்ற அலப்பறைல கண்டிப்பா எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்திடுவாங்க அடுத்த தடவை....


Anbarasu K
மார் 31, 2025 09:46

நீங்க நீங்க வரலாம் வரலாம் அதுக்கும் வாழ்த்துக்கள் உலகின் பெரியண்ணா


Srinivasan Krishnamoorthy
மார் 31, 2025 11:32

best wishes to trump. make America great again


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை