உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர், விமானி மற்றும் வணிக விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேன். கோடீஸ்வரரான இவர், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு நெருங்கிய கூட்டாளி. புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: திறமையான வணிகத் தலைவர், கொடையாளர், விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை நாசாவின் நிர்வாகியாக பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளி மீதான அவரது ஆர்வம் மற்றும் அனுபவம் எதிர்க்கால ஆய்விற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாசாவை புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்ல அவர் பொருத்தமானவர் ஆக இருப்பார். ஜாரெட் ஐசக்மேன் , அவரது மனைவி மோனிகா மற்றும் அவர்களது குழந்தைகள் மிலா மற்றும் லிவ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஐசக்மேன் யார்?

* 42 வயதான ஐசக்மேன் விண்வெளிக்குப் புதியவரல்ல. திறமையான ஜெட் விமானியாக, அவர் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவர். * ஒரு திறமையான விமானி மற்றும் வணிக விண்வெளி வீரர். 7,000 மணி நேரங்களுக்கும் அதிகமான விமான பயணம் அனுபவம் கொண்டவர்.* செப்டம்பர் 2024ல், உலகின் முதல் வணிக விண்வெளி நடைப்பயணம் செய்தவர் என்ற வரலாற்றைப் படைத்தார்.* டிராகன் இன்டர்நேஷனல் என்ற விமானப் போக்குவரத்து ஒப்பந்ததாரர் நிறுவனத்தையும் நிறுவினார். பில்லியனர் தொழிலதிபராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 05, 2025 09:59

ஜாரெட் ஐசக்மேன் கொடையாளர். இந்த ஒரு விஷயம்தான் அதிபர் ட்ரம்பை ரொம்ப கவர்ந்தது. ஆகையால்தான் அவரை நாசாவை வழிநடத்த நியமிக்கிறார் ட்ரம்ப். மீண்டும் - சோழியன் குடுமி சும்மா ஆடாதுப்பா...?


Field Marshal
நவ 05, 2025 10:42

டிரம்புக்கு ...ஆடாது ..


புதிய வீடியோ