வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த செய்தியில் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா குடியரசு இனி பல விதமான சர்ச்சை மற்றும் உண்மையான திறன் வெளிப்பாடுகள் எளிதாக உலகிற்கு தெரியும் வாய்ப்பாக அமையும்
வாஷிங்டன்:அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டுவதற்கும், இந்தியர்களை வேலைக்கு எடுக்கவும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து டிரம்ப், சொந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kvuwc2jn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செயற்கை நுண்ணறிவு தொடர்பாக வாஷிங்டனில் நடந்த மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்க தொழில்நுட்பத்துறை நீண்டகாலமாக ஒரு தீவிரமான உலகமயமாக்கலை பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சொந்த நாட்டு மக்களை நம்பிக்கையற்றவர்களாக உணர வைத்தன. சீனாவில் ஆலைகளை கட்டியது; இந்தியர்களை வேலைக்கு எடுத்தன. அதேவேளையில் தன் நாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த காலம் முடிந்து விட்டது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி முழுதுமாக அமெரிக்க நிறுவனமாக இருக்க வேண்டும். அனைத்திலும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பிரதானமாக வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த செய்தியில் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா குடியரசு இனி பல விதமான சர்ச்சை மற்றும் உண்மையான திறன் வெளிப்பாடுகள் எளிதாக உலகிற்கு தெரியும் வாய்ப்பாக அமையும்