உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னிடம் ஏதும் கேட்டதில்லை; எலான் மஸ்கிற்கு டிரம்ப் பாராட்டு

என்னிடம் ஏதும் கேட்டதில்லை; எலான் மஸ்கிற்கு டிரம்ப் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'எலான் மஸ்க் ஒரு தேச பக்தர். அவர் என்னிடம் ஏதும் கேட்டதில்லை' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில், டிரம்ப் பேசியதாவது: எலான் மஸ்க் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு தேச பக்தர். அவர் என்னுடைய நண்பர் ஆகிவிட்டார். அவர் ஒரு போதும் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. அவர் கேட்டிருக்கலாம்.அவர் எப்போதாவது என்னிடம் ஏதாவது கேட்பாரா என்று நான் எப்போதும் யோசிக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னிடம் எதுவும் கே ட்டதில்லை. எலான் மஸ்க் என்னிடம் ஏதாவது கேட்டால் மக்களுக்கு தெரியப்படுத்துவேன். நான் மின்சார கார் ஆணையை நீக்கிவிட்டேன். அது அவரை எவ்வாறு பாதிக்கிறது என்பது எனக்கு தெரியாது. அவர் இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அது ஒரு அற்புதமான பண்பு என்று நான் நினைக்கிறேன். டெஸ்லா வாகனங்களுக்கு தீ வைப்பவர்கள் மற்றும் டெஸ்லா சொத்துக்களை சேதப் படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததற்காக அட்டர்னி ஜெனரல் நன்றி.குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்போது அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sridhar
மார் 25, 2025 14:25

அவருக்கு என்னங்க தேவைப்படப்போகுது? அவரோ உலகப்பெரும் பணக்காரரு. கவர்மென்டுக்கு எதிரா இருந்தபோதே அவங்களால இவர ஒன்னும் செய்யமுடியல. அவுரு பிசினெஸ் எல்லாம் நல்லாத்தான் போயிட்ருக்கு. இப்போ ஜனாதிபதியே அவர் பிரெண்டுனும்போது அதுக்குமேல என்னெங்க வேணும்?


புதிய வீடியோ