உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்

பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பாராட்டி உள்ளார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரசாரம் முதல் பிரதமர் மோடியை தனது நண்பர் எனக் கூறி வருகிறார். அவரை பாராட்டியும் பேசி உள்ளார். அதேநேரத்தில் இந்தியா அதிகளவு வரி விதித்து வருகிறது எனவும் புகார் கூறியிருந்தார். கடந்த பிப்., மாதம் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பிறகும், மோடியை பாராட்டினாலும், வரி குறித்து குற்றம்சாட்டியே டிரம்ப் பேசி வந்தார். இதற்கு பதில் வரி விதிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.சமீபத்தில் கனடா, இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் டிரம்ப் கூறுகையில், '' சமீபத்தில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் என்னை சந்தித்தார். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது கொடூரமானது. பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி. உண்மையில் அவர் எனது நண்பர். நாங்கள் இருவரும் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து சிறப்பாக பணியாற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
மார் 30, 2025 13:42

அமெரிக்கா காலாவதியான ராணுவ தளவாடங்களை நமது தலையில் கட்டப் போகிறது என்று அர்த்தம்!


தமிழன்
மார் 30, 2025 02:09

எனக்கு நீ அடிமை உனக்கு நான் அடிமை டீல் ஓகேவா?? இனம் இன்னொரு இனத்தோடுதான் சேரும்


Sundar
மார் 30, 2025 10:20

தமிழர்கள் திராவிட அடிமை போல...


மதிவதனன்
மார் 29, 2025 21:29

டிரம்ப் க்கு வாய்த்த அடிமை விடுவாரா


spr
மார் 29, 2025 21:14

புகழ்ச்சிக்கு மயங்காதவர் எவருமில்லை அதிலும் மோடிக்கு இது பிடித்த ஒன்றே அதனால், இது "கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கும் செயல்" பன்னாட்டு முதலீடு உள்ளேவர ஏற்றபடி சட்டங்கள் மாற்றப்படும் ஏற்கனவே நம் கைபேசித் தொடர்பு பன்னாட்டு அளவில் நுழைவதால் எதிர்காலத்தில், பல பிரச்சினைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது


KRISHNAN R
மார் 29, 2025 20:41

ஒரு வேளை,, வரி போடுறது டிரம்ப் அவரின் தனி உரிமை என்கிறாரா என்று சந்தேகம் இருக்கு


skanda kumar
மார் 29, 2025 20:08

நம்ப ஆளு மோடி வெச்சு செய்யறதுல கில்லாடி நம்பர் 1


skanda kumar
மார் 29, 2025 20:05

முகத்து மேல புகழ்ச்சி முதுகு மேல குத்து இது டிரம்ப்


ஆரூர் ரங்
மார் 29, 2025 20:00

யாரோ பின்னின்று சொல்லிக் கொடுக்குறாங்க. உள்ளர்த்தம் வேறு. வரிகளைக் குறைப்பதால் ஒரு பலனும் இருக்காது. அமெரிக்க பண்டங்களின் விலை இங்குள்ள சாமானியர்களின் கைக்கு எட்டாது. இங்கு விற்பது கடினம்.


அப்பாவி
மார் 29, 2025 19:45

ட்ரம்ப் பேச்சைக் கேட்டு டாரிஃபை குறைத்தவர் புத்திசாலிதான்.


Srinivasan Krishnamoorthy
மார் 30, 2025 15:47

what is your problem for tariiff reduction to costly bikes and liquor. no impact to our internal economy. Chinese cars export impacted a lot due to us tariffs. let Chinese suffer, world will be better off


Ganesh
மார் 29, 2025 19:36

டிரம்ப் கேக்குறது தானம் Tax rebate நம்ம ஆளு மோடி வியாபாரி... அதெல்லாம் குடுக்க மாட்டாரு.... பெதம், தண்டம் நம்ம கிட்ட இப்போ பலிக்காது...ஆகையால் இப்போ இருக்குறது சாமம் கெஞ்சுறது ... இப்போ அதை தான் டிரம்ப் செஞ்சிக்கிட்டு இருக்காரு மோடி கிட்ட... என்ன கொஞ்சம் பாலிஷ் ஆ ஐஸ் வச்சி கெஞ்சுறரு


சமீபத்திய செய்தி