உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மைதானத்துக்கு தன் பெயர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார் டிரம்ப்

மைதானத்துக்கு தன் பெயர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார் டிரம்ப்

வெஸ்ட் பாம் பீச்: 'வாஷிங்டன் கமாண்டர்ஸ்' கால்பந்து அணிக்காக கட்டப்பட உள்ள புதிய மைதானத்திற்கு, அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரை வைப்பது அழகாக இருக்கும் என, வெள்ளை மாளிகையின் செ ய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உ ள்ளார். வாஷிங்டன் கமாண்டர்ஸ் கால்பந்து அணிக்காக, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் புதிய மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆர்.எப்.கே., ஸ்டேடியம் இருந்த இடம், தேசிய பூங்கா சேவை அமைப்புக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் ஒரு புதிய, நவீன மைதானத்தை, 35,000 கோடி ரூபாய் செலவில் கட்ட கமாண்டர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆர்.எப்.கே., ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. இந்த ஸ்டேடியம் கட்டுமானத்தை சாத்தியமாக்கியதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய பங்கு வகித்ததால், இந்த புதிய மைதானத்துக்கு அவருடைய பெயர் வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என, வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது. தன் பெயரை இந்த மைதானத்துக்கு சூட்ட அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து கமாண்டர்ஸ் அணியின் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி