உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒபாமாவை சிறையில் அடைப்பது போன்ற ஏ.ஐ., வீடியோ வெளியிட்டு டிரம்ப் விஷமத்தனம்

ஒபாமாவை சிறையில் அடைப்பது போன்ற ஏ.ஐ., வீடியோ வெளியிட்டு டிரம்ப் விஷமத்தனம்

வாஷிங்டன்: அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்து, சிறையில் அடைப்பது போன்ற ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ வை, தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளா ர். 'யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது' என துவங்கும்படி அந்த வீடியோ உள்ளது. அதில், முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் இந்த வாசகத்தை கூறுகின்றனர். ஒரு கட்டத்தில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலேயே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஒபாமாவுக்கு கைவிலங்கிடுகின்றனர். இதைப் பார்த்து அதிபர் டிரம்ப் சிரிப்பது போலவும், பின்னர் கைதிகளுக்கான ஆரஞ்சு நிற உடையில் ஒபாமா சிறையில் இருப்பது போன்றும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒபாமாவை, மிகப் பெரிய தேர்தல் மோசடிக்காரர் என டிரம்ப் கடந்த வாரம் விமர்சித்துஇருந்தார். மேலும், 2016 தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுக்க, ஒபாமா மோசடி வழிகளை கையாண்டதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட் புகார் கூறியிருந்தார். ஒபாமா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியலுக்காக உளவுத்துறையை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், ஒபாமாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் துளசி கபார்ட் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏ.ஐ., வீடியோவை டொனால்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலர், டிரம்ப் பொறுப்பில்லாதவர் என விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 22, 2025 19:25

டிரம்புக்கு நரம்பு தளர்ச்சி என்றுதான் போனவாரம் செய்தி. இந்த செய்தியை படித்தபிறகு மூளை வளர்ச்சி இல்லை என்றும் தோன்றுகிறது.


venugopal s
ஜூலை 22, 2025 12:00

நிச்சயமாக இது போன்ற ஐடியா நம்மவர் தான் கொடுத்து இருப்பார்.


SUBBU,MADURAI
ஜூலை 22, 2025 08:07

ஆமா தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பல நாடுகளை நாசமாக்கி அந்த நாட்டு மக்களை நடுத் தெருவில் அலைய விட்ட இந்த கருவாப் பயல் ஒபாமாவுக்கு மட்டும் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தீங்க இதுவரையில் எந்த போரையும் நடத்தாமல் அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் எனக்கு மட்டும் அந்த நோபல் பரிசை கொடுக்க மாட்டீங்க அதனாலதான் இப்படியொரு கார்ட்டூனை போட்டேன்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை