உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா குறித்த கேள்விக்கு இந்தியா பற்றி பதிலளித்த டிரம்ப்

ரஷ்யா குறித்த கேள்விக்கு இந்தியா பற்றி பதிலளித்த டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்கு விதித்த வரி தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, வாஷிங்டன்னில் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கியை சந்தித்த பிறகு டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியதாவது: எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரி விதிக்கப்பட்டதை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீர்களா?இதனை ஏதும் இல்லை என்கிறீர்களா? இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு டிரம்ப பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

N.Purushothaman
செப் 05, 2025 05:47

உலக அரங்கில் அமெரிக்காவையே பகடிக்கு ஆளாக்கிட்டாரு இந்த கோமாளி ..


Ramesh Sargam
செப் 05, 2025 03:29

டிரம்ப்புக்கு வந்திருக்கும் இந்த வியாதி என்னவென்று தெரியாமல் தலைசிறந்த மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்களாம்.


Shivakumar
செப் 05, 2025 02:29

நாம ஒன்னு கேட்ட நம்மள அசரவைக்கிற மாதிரி பதில் சொல்லுவார். இவரு சுத்தமா மண்டை குளம்பி மெண்டல் சுத்திகிட்டு இருக்கார். இவரு நினைப்பு பூராவும் இந்திய மேலேதான் இருக்கு. அந்த அளவுக்கு இந்திய அரசாங்கம் இவரை பாடா படுத்தி இருக்கு,


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 01:37

இங்கே எல்லா பிரச்சினைக்கும் நேருவை கூப்பிடுவார், நம்ம ஜீ. அது போலவா?


Tamilan
செப் 05, 2025 00:45

மதவாதிகளுக்கு பிடித்த கிலி மறையவில்லை.


Ravi Chandran .K , Pudukkottai
செப் 04, 2025 23:21

நமது கிராமங்களில் உள்ள ஒரு பழமொழி போல் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்கிறார் டிரம்ப். ரஷ்யா மீதான நடவடிக்கை குறித்து நிருபர் கேட்டால் இந்தியா மீதான வரி விதிப்பு குறித்து சொல்கிறார்.


பேசும் தமிழன்
செப் 05, 2025 08:55

இதை நானும் சொல்ல வந்தேன்.. நீங்களே சொல்லி விட்டீர்கள்..... சென்னைக்கு வழி கேட்டால்.... மதுரைக்கு வழி சொல்லி விட்டேனே என்று சொல்வது போல் இருக்கிறது இவரது பதில்.


ManiMurugan Murugan
செப் 04, 2025 23:16

ரஷ்யாவிடம் இந்திய சீன வர்த்தகத்தை பற்றி பேசும் அமெரிக்க அதிபர் அமெரிக்கா ரஷ்ய வர்த்தகத்தை நிறுத்தாது ஏன் ஐரோப்பிய யூனியன்களை ஏன் தடுக்கவில்லை அமெரிக்கா


Saai Sundharamurthy AVK
செப் 04, 2025 22:36

மொத்தத்தில் டிரம்ப் ஒரு மெண்டலாகவே மாறி விட்டதாக தெரிகிறது.


தத்வமசி
செப் 04, 2025 22:14

கம்சன் போல ஆகி விட்டார். எங்கு பார்த்தாலும், எதைக் கேட்டாலும் இந்தியாவுக்கு வரி விதித்தாகி விட்டது. அப்பாடா அல்லக்கைகளுக்கு என்ன ஒரு சந்தோஷ செய்தி. ஜிஎஸ்டி குறைப்பை விட டிரம்ப் கொடுத்த செய்தி தான் அல்வா.


Pandi Muni
செப் 04, 2025 22:03

மென்டலா இல்ல மென்டல் மாதிரி நடிக்கிறாரா?


rukmani
செப் 05, 2025 01:33

கிட்ட திட்ட இரண்டும் ondruthaan.


rukmani
செப் 05, 2025 01:35

கிட்ட திட்ட இரண்டும் ஒன்றுதான்.


புதிய வீடியோ