உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்-1 பி விசா குறித்து விவாதம்; எலான் மஸ்க் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார் டிரம்ப்!

எச்-1 பி விசா குறித்து விவாதம்; எலான் மஸ்க் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார். அந்த வகையில் இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணனை செயற்கை நுண்ணறிவு ஆலோசகராக நியமித்தார். இதை விமர்சனம் செய்து டிரம்ப் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.ஆனால், டிரம்ப் ஆதரவாளர்களான எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர், அறிவு சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிடுகின்றனர். H-1B விசாவில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில், 'உங்கள் அணி வெற்றி பெற விரும்பினால், அதற்கு நீங்கள் திறமையானவர்களை உங்கள் அணியில் சேர்க்க வேண்டும். அமெரிக்காவிற்கு வந்து இந்த நாட்டிற்கு பங்களிப்பதற்காக கடுமையாக உழைத்திருந்தால், அவர்களுக்கு என் மரியாதை உண்டு' என கூறினார். விவேக் ராமசுவாமி, “பிரச்னை குடியேற்றத்தில் இல்லை, மாறாக அமெரிக்க கலாசாரத்திலேயே உள்ளது. அமெரிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை தவறாக வளர்க்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் குறைபாடுள்ளது” என்று தெரிவித்து இருந்தார்.இப்படி தன் கட்சியிலேயே, இரு தரப்பினர் நேருக்கு நேராக மோதிக் கொண்டிருக்கும் சூழலில்,'எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்' என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் நிலைப்பாட்டிற்கு, டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார். 'நான் எப்போதும் விசாக்களை விரும்பினேன், நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால் தான் H1B விசாக்கள் எங்களிடம் உள்ளன' என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கிறது. இதை வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் 3 ஆண்டுகள் தங்கி இருக்கலாம். அதிகபட்சமாக 6 ஆண்டுகள் இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 29, 2024 21:03

ஆத்மநிர்பார்னு ஜல்லியடிப்பாங்க.


அப்பாவி
டிச 29, 2024 21:02

விவேக்குக்கு வரவில் கல்தா குடுக்கப்படும்.


Svs Yaadum oore
டிச 29, 2024 12:53

டிரம்ப் தேர்வுக்கு பிறகு ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க அரசு நிர்வாக நியமனம் ...இந்த இந்தியர்களை நியமனம் செய்தது டிரம்ப் ....சமீபத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்ற சென்னையை சேர்ந்தவர் Artificial Intelligence துறை ஆலோசகராக நியமனம் ... சென்னை SRM கல்லுரியில் படித்தவர். இந்த நியமனங்களை பார்த்து இப்பொது அமெரிக்க வில் இந்தியர்களுக்கு எதிரான ஏகப்பட்ட பதிவுகள்.. மிக மோசமான இந்திய கலாச்சார மதம் சார்ந்த இழிவு படுத்தும் பதிவுகள். இதை தூண்டி விடுவது உலகளாவிய மதம் மாற்றிகள் மற்றும் மூர்க்க கும்பல்கள் ...இந்த இந்தியருக்கு எதிரான வெள்ளைக்காரனுங்க பதிவை கண்டித்து விடியல் திராவிட அக்கா சமூக நீதி மத சார்பின்மையாக கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வத்தி ஊர்வலம் நடத்துவார் ...


Sivagiri
டிச 29, 2024 12:09

அறிவு கொண்டவர்களை உள்ளே விடுவீர்களா? அப்போ உலகிலேயே அதிக பகுத்தறிவு கொண்ட , அறிவாலய மாடல் ஆட்களை உள்ளே விட மாட்டீங்களா ? . . .


Sainathan Veeraraghavan
டிச 29, 2024 11:17

INDIAN ORIGIN CHILDREN AND CHINESE CHILDREN IN AMERICA EXCEL IN EDUCATION . MANY INDIANS ARE MANAGING FORTUNE 500 COMPANIES VERY EFFICIENTLY. AMERICANS MUST SPEND MORE TIME AND ENERGY IN GROOMING THEIR CHILDREN PROPERLY AND MAKING THEM FIT.


Sundar Pas
டிச 29, 2024 10:28

ஓவரா சீன் போடாதிங்க, முதலில் நீங்கள் அடுத்த நட்டு நிபுணர்களை வேலைக்கு எடுக்காதிங்க, விசா கொடுக்காதீங்க, படிக்க அனுமதி கொடுக்காதீங்க, சுற்றுலா விசா கொடுக்காதீங்க, இப்படி நீங்கள் செய்வதால் அந்தந்த நாடுகளாவது முன்னேறும்.


Srinivasan K
டிச 29, 2024 18:38

what is your problem, america needs talents for development , not illegal immigrants as planned by Biden, democrats