உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம்; டிரம்ப் திட்டவட்டம்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம்; டிரம்ப் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார். தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.https://www.youtube.com/embed/ba4mvl2ep3gஇந்நிலையில் இன்று அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புடினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், போதைப்பொருள் மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும்.சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியதாவது: நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது. நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லை ரோந்துப் படையினரால் 8,326 சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அனைவரும் விரைவாக நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மார் 03, 2025 16:54

சிவப்பி இந்தியர்கள் மட்டுமே பூர்வகுடிகள். மண்ணுக்கு சொந்தகாரர்கள். அவர்களை ஒடுக்கிவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவ‌ர்க‌ள் மற்றவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்பது வேடிக்கை.


Vijay D Ratnam
மார் 03, 2025 16:37

முறையான ஆவணங்கள், தூதரக அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம். இல்லலீகள் இமிக்ரேஷனை வேலைக்கு வைத்தால் அபராதம் சிறைத்தண்டனையுடன் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்வோம் என்று ட்ரம்ப் சொன்னது மட்டுமல்லாமல் ஆக்ஷனில் இறங்கிய விதம், உக்ரெய்னுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுக்கான 350 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 30,56,550,0000000 Rs. முப்பது லட்சத்து ஐம்பபத்தாறாயிரத்து ஐநூற்று ஐம்பது கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடு அல்லது உக்ரெய்ன் நாட்டில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா எடுக்க காலவரையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு, ஓசில கொடுக்க நான் ஒன்றும் மடம் நடத்தவில்லை, ஒவ்வொரு டாலரும் அமெரிக்க மக்களின் உழைப்பில் வந்த வரிப்பணம் என்று ட்ரம்ப் கேட்ட விதம், ஏழை நாடுகளுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த நிதியை நிறுத்தி, அதை வறுமையில் இருக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கு உதவிப்பணமாக வழங்குவோம் என்று அறிவித்து இருப்பது, டாலருக்கு எதிராக ப்ரிக்ஸ் நாடுகள் தனியாக கரன்சி கொண்டுவந்தால் அந்த நாடுகளுக்கான வரியை அதிகப்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்த விதம் அமெரிக்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவில் தற்போது 76 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில் 53 லட்சத்துக்கும் மேல் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள் மீதமுள்ள 23 லட்சம் பேர் முறையான ஆவணங்களுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள், பணிபுரிகிறார்கள், முறையாக வரி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு ட்ரம்பின் அறிவிப்பால் எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களுக்குத்தான் பிரச்சினை. இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கைகளை அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்து ஆக்ஷனில் இறங்க வேண்டும். பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற இல்லீகல் எண்ட்ரீஸ்களை குடுமபத்தோடு தேடிப்பிடித்து துரத்த வேண்டும்.


R K Raman
மார் 03, 2025 15:43

தீவிர வாதிகள் ஒடுக்க இதேபோல் நாமும் செய்ய வேண்டும். ஆனால் ஓட்டுப் பொறுக்கிகள் செய்ய விடமாட்டார்கள்


Arul. K
மார் 03, 2025 14:13

டிரம்ப் நாட்டு நலனில் மிக தெளிவாக உள்ளார். இந்தியாவிலும் இதையே கடைப்பிடிக்க வேண்டும்.


Narayanan
மார் 03, 2025 13:05

நம் நாட்டிலும் இதுபோல் முறையற்ற குடியேறிகளை நாடுகடத்தவேண்டும் . குறிப்பாக பாகிஸ்தான் / பங்களாதேஷ்


ஷங்கர்
மார் 03, 2025 12:47

ட்ரம்ப் செய்வதே சரி. ஒவ்வொரு நாடும் இதை செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை