உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாவிடம் பேசிய அதிபர் டிரம்ப்; என்ன சொன்னார் தெரியுமா?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாவிடம் பேசிய அதிபர் டிரம்ப்; என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன்: 'அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களுக்காக இந்த பரிசை ஏற்றுக்கொள்கிறேன்,' என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மரியா கொரினா மச்சாடோ, 58, விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதனால், டிரம்ப் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். அமைதியை விட, நோபல் பரிசு குழுவினர் அரசியலையே பார்த்துள்ளனர் என்று, அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகையும் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாதது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது; அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களுக்காக இந்த பரிசை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர் என்றார். நான் அதை எனக்கு கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் அதனை கொடுக்க விரும்பியிருக்கலாம். நான் அவருக்கு பலவழிகளில் உதவியுள்ளேன். வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் சமயத்தில் என்னுடைய உதவி அவர்களுக்கு தேவைப்பட்டது. நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பல மில்லியன் உயிர்களைக் காப்பாற்றினேன்.ஏழு போர்களை நிறுத்திய எனக்கு, ஒவ்வொரு போருக்கும் ஒரு நோபல் பரிசை கொடுக்க வேண்டும். அப்போது, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தினால் நீங்கள் நோபல் பரிசை வெல்லலாம் என்று சொன்னார்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ