உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்: அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றம்

ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்: அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றம்

நியூயார்க்: ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா தள்ளுபடி விலையில், கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு விற்பனை செய்து வருவது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. இதற்காக இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார்.இது குறித்து ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரிமித்தவே் கூறியது, வரி விதிப்பு விஷயத்தில் ரஷ்ய-இந்திய இறந்து போன பொருளாதாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்பு ‛டெட்ஹேண்ட்' எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி டிரம்ப் நினைத்து பார்க்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.இதனால் ஆத்திரமேடைந்த டிரம்ப், ரஷ்யா நோக்கி இரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி வைத்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை ரஷ்யா - அமெரிக்கா இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஆக 02, 2025 13:03

வெட்டி வேலை...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 13:01

என்னது சமாதானப்பிரியர் டிரம்ப்பின் ஆச்சியிலா இதெல்லாம் நடக்கு >>>>


Anand
ஆக 02, 2025 11:53

ரஷ்யா நோக்கி 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி அப்படியே யுத்தம் செய்து கிழிச்சுருவான்... கேவலம் எந்தவித வான் எதிர்ப்பு சாதனங்கள் இல்லாத ஈரான் மீது குண்டு போடுவதற்கு எவ்வளவு பில்டப்பு கொடுத்தான்.. இவன் உண்மையிலேயே ஒரு தைரியமான ஆம்பிளையா இருந்தால் ரஷியாவை தாக்கி பார்க்கட்டும்..


ramesh
ஆக 02, 2025 11:20

ஹிட்லர் கூட ரஷ்யாவிடம் தான் படு தோல்வியை சந்தித்தார் . இந்த டிரம்ப் ஒன்றும் ரஷ்யாவிடம் கிழித்து விட முடியாது . நாட்டாமை உதய் வாங்க போவது உறுதி . நமது உண்மையான நண்பன் ரஷ்யா மட்டுமே. 1971 போரில் அமெரிக்கா , பாகிஸ்தானை ஆதரித்ததுபோலவும் ,ரஷ்யா இந்தியாவை ஆதரித்தது போன்ற நிலை திரும்ப வருகிறது போல தெரிகிறது


Nagercoil Suresh
ஆக 02, 2025 07:44

உக்ரைனிடமிருந்து எடுத்துக்கொண்ட அணுஆயுதங்களை திருப்பி வழங்க வேண்டும், உடனே போர் முடிவுக்கு வரும். 21ஆம் நூற்றாண்டில் நாடு பிடிக்க முயல்வது தவறான நோக்கம். போரை உடனே முடிவுக்கு கொண்டுவருவது தான் சிறந்த செயல்...


Sudha
ஆக 02, 2025 07:11

ஆக இவனுக்கு நோபல் பரிசு நிச்சயம்


ராமகிருஷ்ணன்
ஆக 02, 2025 06:29

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு. ரஷ்யா பெரிய தலைகட்டு, மோதி வீணா சாவாதே. ஊருருக்கு பெரிய பெரிய நாட்டாமைகள் வந்துட்டாங்கல்ல, நீ பழைய கெத்துலேயே திரியாதே. அடக்கி வாசி டிரம்பு


சூரியா
ஆக 02, 2025 05:50

நமக்கு ஒரு ராகுல் போல, அமெரிக்காவிற்கு டிரம்ப்!


நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2025 05:11

அமெரிக்காவின் தீவிரவாத ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் ?


N Sasikumar Yadhav
ஆக 02, 2025 04:16

பைத்தியத்திடம் சிக்கி சின்னபின்னமாக போகின்றது அமேரிக்கா போர்வெறி பிடித்த மிருகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை