உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா - ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார். அந்த வகையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா - ஜப்பான் இடையிலான இந்த புதிய வரி தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அதேவேளையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், ஆட்டோ மொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு துறைசார் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், 'இது அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவின் புதிய அத்தியாயம்,' என்றார். வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும், அமெரிக்கா 15 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும். தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒப்பந்தமாகும்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiMurugan Murugan
செப் 05, 2025 23:24

அமெரிக்க அதிபர் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி போல திரை கதை வசனம் நாடகம் போடுகிறார் ஜப்பான் பொருட்கள் இறக்குமதி அனைத்தும் இராணுவத்திற்கு தேவையான உபரிகள் என்பதால் வரி குறைக்க தாள் வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 05, 2025 10:01

மிரட்டி, வற்புறுத்தி, வலுக்கட்டாயமாக வாங்கப்படும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் வெறும் ஒப்பந்தங்களாகவே காலாவதி ஆகிவிடும். கையெழுத்து போடும் நாடுகளுக்கு தெரியாதா தாங்கள் ஒரு ....டன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று? கோமாளி அரசனானால் அரசு சர்க்கஸ் கூடாரமாகும் என்று எல்லோருக்கும் தெரியும். நம்ம தமிழகத்தில் கையெழுத்தாகும் முதலீட்டு ஒப்பந்தங்களும் இவ்வகையானவையே. சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி வாயில் போட்டுக்கொண்டால் இனிக்குமா என்ன?


தியாகு
செப் 05, 2025 09:35

இந்த கோமாளி ட்ரம்ப் செய்வதை பார்த்தால் பாண்டியராஜின் ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம் பைத்திய காமெடிதான் நினைவுக்கு வருகிறது.


Ramesh Sargam
செப் 05, 2025 09:24

ட்ரம்ப் தன் பின்னால் வால் ஆட்டிகொண்டுவரும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வரியே விதிக்கமாட்டார். இப்படி எல்லாம் செய்தால் இந்தியாவை வெறுப்பேற்றும் என்று அவர் நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் எதுவுமில்லை.


ஆரூர் ரங்
செப் 05, 2025 09:19

என்னுடைய /ஆணைக்கிணங்க/ அமெரிக்காவில் ஜப்பான் 550 பில்லியன் டாலரை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதுதான் டிரம்மாரின் அறிக்கை. ஜப்பான் துணைப் பிரதமர் எங்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை