உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1300 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டை முன் எப்போதும் இல்லாத வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது நோக்கம் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். அதனை செயல்படுத்தும் பொருட்டு, நிர்வாக சீர்திருத்தம், வரி விதிப்பு என ஒவ்வொரு கட்டங்களாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4nwzsizl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக, வெளியுறவுத்துறையில் உள்ள 1300 பணியாளர்களை முதல்கட்டமாக டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவுப்படி, உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1107 பேரும், வெளிநாட்டு பணிகளில் 246 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நீக்கத்தை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அலுவலகங்களின் வெளியே போராட்டத்தில் குதித்தனர். நாட்டுக்காக உழைத்த தங்களுக்கு சீர்திருத்தம் என்ற பெயரில் அநீதி இழைக்கக்கூடாது. எங்களை இதுபோன்று நடத்தக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:33

ஒரு நாள் முதல்வர் போன்று, டிரம்ப் ஒரு நாள் தமிழக முதல்வராக வேண்டும். இங்கு ஊழல் புரியும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்று எல்லாத்துறைகளிலும் உள்ள ஊழல்வாதிகளை களையெடுக்கவேண்டும்.


GMM
ஜூலை 12, 2025 10:00

குற்றச்சாட்டுகள் இல்லை. சீர்திருத்த முறை சரியல்ல. சுய தொழில், தனியார் வேலை விட்டு அரசு வேலைக்கு வந்து விட்டனர். இனி இவர்கள் எதற்கும் பயன்பட மாட்டார்கள். அல்லது அரசு ரகசியங்களை விற்று விடுவர். வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி அரசு பணிக்கு திறமையானவர்கள் சேர அஞ்சுவர். அமெரிக்கா என்ன சீனாவா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:57

உண்மையாகவே சீர்திருத்தம் என்றால் இவ்வளவு எதிர்ப்பு எழுவது ஏன் >>>> விடியல் கிம்ச்சை மன்னர் போற பாதையில டிரம்ப்பும் போறாரா >>>>


V RAMASWAMY
ஜூலை 12, 2025 08:47

இதன் பெயர் தான் சீர்திருத்தம், இங்கு என்னடாவென்றால், கிம்பளத்தில் சுக வாழ்வு வாழ்ந்துகொண்டு வேலையே செய்யாத தூங்கும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கங்கள், சலுகைகள், போதாதற்கு உம்மென்றால் இம்மென்றால் அரசு வேலை. மக்கள் வரிப்பணம் என்ன கிள்ளுக்கீரையா அள்ளித்தெளிப்பதற்கு? அரசு அலுவகங்களில் Work Study என்கிற பணி ஆய்வு செய்து தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தினால், ஐம்பது சதவிகித பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய பரிந்துரை செய்வார்கள்.


sridhar
ஜூலை 12, 2025 08:30

Trump is America’s super fast express towards doom.


Padmasridharan
ஜூலை 12, 2025 08:25

இறப்பதற்கு முன் விக்கிபீடியா போன்றவற்றில் தங்கள் பெயரை சரித்திரம் படைக்க, ஆட்சிகள் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன உலகத்தில். கணினி அமைதியை கொடுத்ததினால் எல்லா வித மக்களும் அமைதியை கலைக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை