உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பேட்டி எடுத்த அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த இன்டர்வ்யூவில், டிரம்ப்பை நண்பராகவும், ஒரு தலைவராகவும் எப்படி பார்க்கிறீர்கள்? என்று பிரிட்மேன் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 2019ல் அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: கடந்த 2019ல் ஹூஸ்டனில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்கள் கூட்டம் அலைமோதியது. நான் உரையாற்றி கொண்டிருக்கும் போது, அதிபர் டிரம்ப் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார். இது குறிப்பிடத்தக்க விஷயமாகும். எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது, என்னுடன் சேர்ந்து அரங்கை வலம் வருமாறு டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்தேன். அமெரிக்கர்களின் வாழ்க்கையை பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிபர் ஒருவர் பாதுகாப்பின்றி நடந்து வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது அவரது சொந்த முடிவாகும். என் மீதும், அந்த நிகழ்ச்சியில் என்னுடைய தலைமையின் மீதும் வைத்த நம்பிக்கையின் பேரில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் என்னுடன் நடைபோட்டார். எங்களுக்கு இடையிலான வலுவான உறவு மற்றும் பரஸ்பரமான நம்பிக்கைக்கு இது சான்றாகும். கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதும், டிரம்ப்பிடம் அதே உறுதியைக் கண்டேன். தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவு இந்தியாவுக்கு உள்ளது. புடினுடன் அமர்ந்து பேசும் போது, போருக்கான நேரம் இதுவல்ல என்று கூறினேன். அதேபோல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் நட்பு ரீதியில், சில விஷயங்களை கூறினேன். உலகில் எத்தனை பேர் உங்களுடன் நின்றாலும், போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என்று சொன்னேன். உக்ரைன் தனது ஆதரவு நாடுகளுடன் பலமுறை பேச்சு நடத்தியது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சண்டையிடும் இருநாடுகள் நேரடியாக பேச்சு நடத்தினால், பிரச்னை சரியாகி விடும்' என்றார். அதேபோல, இந்தியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளித்ததாவது: போட்டி என்பது மோதல்களாக மாறக்கூடாது. வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற்றப்படக்கூடாது. மோதலை விட பேசி தீர்வு காண்பதையே எப்போதும் விரும்புகிறோம், என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
மார் 17, 2025 16:31

இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் செயல்களைப் பார்க்கும்போது கவுண்டமணி செந்தில் காமெடி போல் உள்ளது!


guna
மார் 17, 2025 17:04

இப்படிக்கு புல் தடுக்கி பயில்வான் வேணு..


Ramesh Sargam
மார் 17, 2025 12:52

இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பு, மோடி, ட்ரம்ப் இடையேயான நட்பு இப்படியே தொடர்ந்து இருக்கவேண்டும்.


अप्पावी
மார் 17, 2025 09:38

உள்ளூரில் அகமதாபாதில் சுவர் போட்டு மறைச்சு ட்ரம்புக்கு பாதுகாப்பு குடுத்ததெல்லாம் மறந்து போச்சு கோவாலு. அப்போ இவர் மேலே மரியாதை, நம்பிக்கை இல்லியாமா?


Anonymous
மார் 17, 2025 10:09

உள்ளூரில் உன்னை மாதிரி ஆளுங்க இருப்பாங்களா, அதான் நம்பிக்கை இல்ல, இப்பிடி அப்பாவியா கேள்வி கேட்க்குரீங்களே?


Appan
மார் 17, 2025 08:55

இந்தியாவுக்கு கெட்ட காலம். டிரம்ப் ஒரு கட்டுபாடும் இல்லாமல் நடக்கிறார். அமெரிக்காவே ஆட்டம் கண்டு இருக்கிறது. இப்போ போய் அவரை புகழலாமா? இனி வரும் காலங்களில் ரிபிஅப்ளிகன் ஆட்சிக்கு வர மாட்டார்கள்..இன்னும் நான்கு ஆண்டுகள் தான் டிரம்பின் ஆட்டம் இருக்கும் .இது நாள் வரை டிரம்பை சார்ந்து இருந்தவர்கள் எல்லோரும் துன்பத்தை தான் கண்டு இருக்கிறார்கள் .ஒரு தலைவன் போய் சொல்ல கூடாது .பொய்யெ பெரிது என ஆட்சி செய்ப்பவரை இப்படி புகழலாமா ?..ஏழ்மையிலும் இந்திய உண்மையை போற்றியது ..மகாத்மா வாழ்ந்த மண்ணில் இருந்து வந்த ஒருவர் இப்படி பேசலாமா. ?


pmsamy
மார் 17, 2025 07:02

ரயில் நிலையத்தில் டீ வித்து பொழைச்ச மோடிக்கு ஆங்கிலம் தெரியுமா?


vivek
மார் 17, 2025 07:26

ஒரு ஐந்து அறிவு


N.Purushothaman
மார் 17, 2025 08:06

இந்த மாதிரி கருத்து எழுத வெக்கமா இல்லை ? அது சரி திருட்டு இராவிடன்கிட்ட அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா ?


SIVA
மார் 17, 2025 08:25

அவரு உழைச்சு தான பிழைச்சாரு என்று ஒரு படத்தில் வசனம் வரும் ....


Natarajan Mahalingam
மார் 17, 2025 08:31

டி விக்கலாம் நாட்டை தான் விக்க கூடாது ஆங்கிலம் அறிவு அல்ல அது ஒரு மொழி அவ்வளவு தான்.


Subramaniyam N
மார் 17, 2025 09:42

Dear pmsamy. Dont write like this against a PM However you have the right to ask anyone including PM. That is democracy. Can you ask the same question to our CM??


Anonymous
மார் 17, 2025 10:12

திருட்டு ரயில் ஏறி வந்த கும்பலுக்கு தெரிஞ்ச ஆங்கிலத்தை விட , கொஞ்சம் நல்லாவே ஆங்கிலம் இரயிலில் டீ வித்தவருக்கு தெரியும்.


Iyer
மார் 17, 2025 06:24

மனதில் எந்தவித - களவோ ஒளிவுமறைவோ - இன்றி அமெரிக்கா நாட்டு நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டு செயல்படுபவர் DONALD TRUMP. அதேபோல் தான் பிரதமர் மோதியும். இவர்கள் இருவரும் சேர்ந்து செயல்பட்டால் - உலகில் போர்களும், சச்சரவுகளும், ஊழல்களும் குறையும்.


Iyer
மார் 17, 2025 06:14

எதிர்கட்சிகளுடன் பேசி, கலந்தாலோசித்து - "முடிவுகள் எடுக்கவும்" - "புதிய சட்டங்கள் உருவாக்கவும்" பயன்படும் செயலி தான் "பாராளுமன்றம்" , அனால் கடந்த 10 வருடங்களில் ஏதாவது எதிர்க்கட்சி உறுப்பினர் - பொறுப்புடனும் , தேச நலனில் அக்கறை கொண்டும் - வாத விவாதங்களில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்துஇருக்கிறீர்களா ?


தமிழன்
மார் 17, 2025 02:02

பேசி எந்த பிரச்சினையையும் தீர்க்கலாம் சூப்பரப்பூ ஊருக்கு மட்டுமே உபதேசம் எதிர்கட்சியின் ஆலோசனையுடன் கடந்த 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு சட்டமாவது அமுலுக்கு வந்துள்ளதா?? எல்லாமே ஓவர் நைட்டில் அல்லது எதிர்கட்சி எம்.பிக்களை வெளியேற்றிவிட்டு சட்டம் அமுலாகிவிடும் 2029ல் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் உறுதி


Venugopal, S
மார் 17, 2025 07:52

கேப்பையில் நெய் வடியும் என செல்லும் கோவை தமிழன் என்ற போர்வையில் எழுதும் முட்டு, யார் அந்த சார், 35 ஆயிரம் கோடி என்ன ஆயிற்று? 95% பணிகள் முடிந்தும் வெள்ளை காடு...போய் 200 ரூவா முட்டு குடு


SIVA
மார் 17, 2025 08:23

ஆட்சி மாற்றம் ஏற்பட பிஜேபி, ஆர் எஸ் எஸ் போன்று காங்கிரஸ் கோஷ்டி பூசலை மறந்து சுயநலமின்றி செயல்பட வேண்டும், இந்திரா பெரோஸ் கான் குடும்ப வாரிசுகள் காங்கிரஸ் விட்டு வெளியேற வேண்டும், இந்த இரண்டில் ஒன்று கூட எப்போதும் நடக்காது, வேண்டும் என்றால் உங்கள் ஆசைக்காக தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும் .....


Khalil
மார் 16, 2025 23:21

கூட்டு களவாணிகள்


Ray
மார் 16, 2025 23:01

எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன்.அந்த தேர்தலில் ட்ரம்ப் தோற்றார்.


முக்கிய வீடியோ