உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்: டிரம்ப் சபதம்

வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்: டிரம்ப் சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் சபதம் விடுத்துள்ளார்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஒரு காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் தூய்மையான, பாதுகாப்பான, அழகான நகரமாக இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன். அவர்களின் பிடியில் இருந்து நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸை விடுவித்து அதை மீண்டும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவோம். நமது ராணுவ வீரர்கள் கலிபோர்னியாவின் நேர்மையான குடிமக்களை பாதுகாப்பார்கள். இவ்வாறு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

visu
ஜூன் 11, 2025 16:47

அமெரிக்காவின் சிறப்பான அதிபர் டிரம்ப் நாட்டின் தேவையற்றவர்களை கலையெடுத்தாலே நாடு சுபீடச்சமாகும்


Sekar
ஜூன் 11, 2025 14:54

அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று புகழ் அடைவார் போல் தெரிகிறது.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 11:57

இந்தியாவில் CAA சட்டத்தை மோதி கொண்டு வந்த போது அமெரிக்க மிஷநரி NGO ஏஜெண்ட் கூட்டம் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்போ அதே அமெரிக்காவுக்கும் கள்ளக் குடியேறிகளால் ஏற்படும் ஆபத்து பற்றி புரிந்துவிட்டது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 11:49

எல்லா நாடுகளிலும் CIA நுழைந்து ஆட்டம் போட்டது. இப்போது CIA எங்கே புதிதாக நுழைய இடமில்லாததால் சொந்த நாட்டுக்கு உள்ளேயே நுழைந்து விட்டது.


Rajasekar Jayaraman
ஜூன் 11, 2025 11:33

அதை தாண் இந்தியாவில் செய்கிறோம் இங்கு மட்டும் மனித உரிமை பேசுவீர்கள் அங்கே எதிரி நாட்டு துரோகிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவாயா உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா.


தத்வமசி
ஜூன் 11, 2025 11:17

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் மீது குற்றமா? அல்லது அவர்களை வெளியேற்ற முனையும் அமெரிக்க அதிபர் மீது குற்றமா? நமது நாட்டிலும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹாங்கியாக்கள் அதிக அளவில் குடியேறி உள்ளனர். அதில் பலர் இங்குள்ளவர்களின் துணையோடு ரேஷன் கார்டு, ஆதார்கார்டு எல்லாம் வாங்கி பெண் கொடுத்து பெண் வாங்கி சரியான குடியுரிமை இல்லாமல் தங்கியுள்ளவர்களை இங்குள்ள மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை நாடு கடத்த வேண்டும். பாகிஸ்தான் விசாவை இந்திய அரசு ரத்து செய்தவுடன் எவ்வளவு பேர் முறையற்ற முறையில் இந்தியாவில் பல காலமாக தங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. புரையோடிய பிறகு அறுவைசிகிச்சை செய்வது பலன் தராது. இன்றைய ஓட்டு வங்கியாக இவர்களை பார்த்தால் நாட்டை காட்டிக் கொண்டிருக்கும் துரோகம் தான் நடக்கும். இவர்களை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் பரிதாப ரீல்ஸ் விளம்பரங்கள் செய்ய ஒரு கும்பல் தயாராக இருக்கிறது. இவர்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை கிடையாது, அவர்களிடம் இருந்து இவர்களுக்கு வரும் வருமானம் தான் முக்கியம்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 11, 2025 10:51

தன்வினை தன்னை சுடும்


Anand
ஜூன் 11, 2025 10:32

அன்று உப்பை தின்ற அமெரிக்கா இன்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளது..


Narasimhan
ஜூன் 11, 2025 09:48

இது ஆரம்பம்தான் தம்பி. எத்தனை வெளிநாடுகளில் வேண்டுமென்றே கலகமூட்டி அப்பாவி மக்களை கொன்றிருப்பீர்கள். அதன் கர்மாதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை