உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்; எச்சரிக்கிறார் டிரம்ப்!

எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்; எச்சரிக்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த சூழலில், அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து அனுமதிகளும் எளிதில் கிடைக்கும் என டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்நிலையில், எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது: சில அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் இருக்கிறது. அதிக வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்.எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் ரூ. 100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள். இந்தியா நிறைய கட்டணம் வசூலிக்கிறது. தொடர்ந்து அதிக வரி விதித்தால் நாங்களும் இந்தியாவுக்கு பரஸ்பர வரி (reciprocal tariffs) விதிப்போம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Martteen Soosaimanickam
டிச 19, 2024 07:59

குட்


JaiRam
டிச 18, 2024 16:53

ஃபோன் பே ஒரு அமெரிக்கா நிறுவனம் ஓனர் வால்மாரட்


GMM
டிச 18, 2024 15:29

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து சைக்கிள் தயாரிக்க முடியாதா ? இந்தியா தேசம் ஆப்கான், பாகிஸ்தான், முன்னாள் வங்கதேச நாடு போல் கிடையாது. TI cycle - சிறுவயதில் பயன்படுத்தியவை. மூல பொருள், மனித வளம் நிறைந்த நாடு இந்தியா . கம்யூனிஸ்ட் ஒரு தடை கல். ஊழல், கறுப்பு பண வாதிகளின் வெளிநாட்டு பொருள் மோகம் அதிகம். 2/4= 0.5. Reciprocal tariff - 4/2=2.


Ganapathy
டிச 18, 2024 14:11

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நாட்டு அரசுகளை உனது அல்லக்கை இடதுசாரிகளை வச்சு கவிழ்த்து தனது பொம்மைகளை வச்சு அந்த நாடுகளை ஆள வச்சு அந்த நாடுகளின் பொருளாதாரத்தை நாசமாக்கும் நீ விரைவில் அதற்கான பெரும் விலையை கொடுப்பாய். உலக மக்களின் சாபம் உன்னை சும்மா விடாது.


Ganapathy
டிச 18, 2024 14:07

ஏன்னா உலகை நீ அப்பாடக்கரு மாதிரி கட்டுப்படுத்த நினைப்பதுதான் இதற்கு காரணம். அமெரிக்கா தனியாக விடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.


SUBRAMANIAN P
டிச 18, 2024 14:06

எங்களுக்கு வரி விதித்தால் நாங்களும் உங்களுக்கு நிறைய வரி விதைப்போம். அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீ இப்போ சப்பை ஆயிட்டே. இன்னும் 10 வருஷத்துல அமெரிக்கா பேரிக்கா ஆகும். எல்லாரும் நல்ல கடிச்சி சாப்பிடலாம். ஓவரா ஸீன் போட்டு இப்போ திவால் ஆகும் நிலைமைக்கு போயிட்டான். இனிமே அமெரிக்கா காரன் வேறு வெளிநாடுகளுக்கு வேலைக்கு போகும் காலம் வரும். உலகம் உருண்டை.


Sudha
டிச 18, 2024 13:33

இந்த மொத்த உலகத்தில நீ ஒருத்தன் தான்யா மூளை முதுகெலும்பு உள்ள ஆளு, வாழ்க வளமுடன்


S S
டிச 18, 2024 12:56

நம்ம நண்பராச்சே. அப்புறம் எப்படி .....


Kumar Kumzi
டிச 18, 2024 12:28

மோடியை பற்றி போட்டுகுடுக்க பப்பூ அமெரிக்கா கெளம்பிடுவான்


ديفيد رافائيل
டிச 18, 2024 11:53

Google pay use பண்ண கூடாது


சமீபத்திய செய்தி