காஸா போருக்கு முடிவு கட்டுவார் டிரம்ப்: பாலஸ்தீன அதிபர் நம்பிக்கை
ரமல்லா: 'காஸா போருக்கு விரைவில் முடிவு கட்டி, அங்கு அமைதியை ஏற்படுத்துவார் டிரம்ப்' என பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், உடன் தொலைபேசியில் பேசிய பாலஸ்தீன அதிபர் முகமத் அப்பாஸ், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது காஸா போர் குறித்தும் பேசியதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து பாலஸ்தீன அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள டிரம்ப் உடன் பாலஸ்தீன அரசும் இணைந்து செயல்பட்டு, காஸாவில் அமைதியை ஏற்படுத்துவோம். டிரம்பும் எங்களுடன் இணைந்து செயல்பட்டு, காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதி தெரிவித்தார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.