உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பின் ஆதரவு முக்கியமானது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் மனமாற்றம்!

டிரம்பின் ஆதரவு முக்கியமானது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் மனமாற்றம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: அமெரிக்க அதிபர் டிரம்புடனான பதட்டமான மோதலுக்கு ஒரு நாள் கழித்து, 'ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரம்பின் உத்தரவு படி ஜெலன்ஸ்கி வெளியேற்றப் பட்டார். டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை இல்லாமல் ரஷ்யாவுடன் நடக்கும் போரில் இந்த நாடுகள் எதுவும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தம் பலருக்கும் புரிகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gfs8mde2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது. அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால் நம்மை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் இந்தப் போரில் வாழ்வது நாம் தான். இது நமது சுதந்திரத்திற்கான போராட்டம், நமது உயிர்வாழ்விற்கான போராட்டம்.இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறேன். அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர்நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anbuselvan
மார் 03, 2025 17:06

இல்லாத ஒன்றை இருப்பதை போலவும் நடக்காத ஒன்றை நடத்தது விட்டது அல்லது நடக்க போகிறது என்றும் இது வரை தமிழக மக்களைத்தான் ஏமாற்றி வந்தார்கள். இப்போது அரசியல் கட்சிகளையும் ஏமாற்ற தொடங்கி விட்டனர். இவர்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என முதலில் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும். அரசியல் சாசனப்படி பொதுவாக மக்கள் தொகை அடிப்படையில் லோக் சபா சீட்டுகள் வரையறுக்கப் பட வேண்டும் என்றும் ஆனால் அப்படிதான் நடக்க வேண்டும் என கட்டாயம் இல்லை என்றும் கூறப் பட்டு இருக்கிறது. இப்போதைக்கு 550 சீட்டுகள்தான் அதிக பட்சம் என உள்ளது. எனவே சீட்டுக்களை கூடுதல் செய்வதற்கு அரசியல் சாசனம் திருத்தப் பட வேண்டும். அதற்கு NDA விடம் மேஜாரிட்டி இல்லை. அது மட்டும் இல்லை மக்கள் தொகை ஆறு கோடிக்கு மேல் உள்ள மாநிலங்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப சீட் ஒதுக்கப் பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டு ARTICLE 81. இதையெல்லாம் நன்கு படித்து விட்டு தங்களது நீதி ஆலோசகர்களை கேட்டு விட்டு கட்சிகள் இந்த கூட்டத்திற்கு போக வேண்டும் என முடிவு செய்தால் - அவர்கள் கட்டாயமாக வேறு ஏதோ காரணத்திற்குதான் அதாவது மத்திய அரசின் மீது வீண் பழி போடவே செல்கிறது என அர்த்தம்.


ramesh
மார் 02, 2025 17:56

அமெரிக்கா இவரை உதறி விட்டால் 2 நாட்களில் ரஷ்யா வில் சிறைக்குள் தான் இருப்பார் .அதனால் வந்த பயம் தான் இது


ramesh
மார் 02, 2025 17:53

அமெரிக்கா கை விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் வந்த மனமாற்றம்


ramesh
மார் 02, 2025 17:50

இந்த போர் வந்ததுக்கு காரணமே இந்த முன்னாள் நடிகன் தானே .இவரால் தான் பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது . ஒரு நாட்டின் தலைவனாக இருக்க எந்த தகுதியும் இல்லாதவர் . இந்த ஆத்திரம் பிடிவாத குணம் தான் போருக்கு முக்கிய காரணம்


பேசும் தமிழன்
மார் 02, 2025 14:04

இவன் ஒரு அறிவில்லாத ஆள் போல் தெரிகிறது.... அதனால் தான் அமெரிக்க அதிபரிடம் சென்று வாக்குவாதம் செய்து விட்டு வந்து இருக்கிறான்.... வாய் கொழுப்பு.... அப்படி பேச வைக்கிறது ஒரு கோமாளியை நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்த பாவத்தை உக்ரைன் மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.


sethu
மார் 02, 2025 14:33

இதை நாம் தேர்ந்தெடுத்த நாம் குற்றம் சொல்லக்கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 02, 2025 11:01

எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது மிகவும் ஆபத்து ......


Barakat Ali
மார் 02, 2025 10:37

வெள்ளை மாளிகை வெள்ளை ஜனாதிபதி வெள்ளை முடிகள் அனைத்தையும் பிச்சிக்கிட்டு திரியப்போறார் .....


Srinivasan Krishnamoorthy
மார் 02, 2025 12:20

Trump is very clear. zelennsky is the us deep state puppet, he will remain orphan with no one to help


ManiK
மார் 02, 2025 10:29

முட்டுச்சந்தில் தள்ளி உக்ரேன் சர்வாதிகாரி செலன்ஸ்கியின் உண்மை சுயரூபத்தை படம் போட்டுக்காட்டிய வன்ஸ், ட்ரம்ப் திட்டம் கச்சிதமாக நிறைவேறியது. போர்நிறுத்தம் வேண்டாம் போர் ஆயுதங்களே தேவை என்னும் செலன்ஸ்கியை ஆட்டிவைக்கும் டீப்ஸ்டேட் லிபரல்ஸை மக்கள் விரட்ட வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
மார் 02, 2025 09:58

muட்டாள் , நடிகன் vs பிஸிநெஸ்மேன் என்று தான் இந்த நிகழ்வை பார்த்தேன் , உனது நடிப்பு திறனை போயி பிஸினெஸ்மேன் இடம் காண்பித்தாயே அதனால் உன்னை மு என்று அழைத்தேன் , தமிழர்களும் இந்த நிகழ்வையும் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்


vbs manian
மார் 02, 2025 09:42

அமெரிக்கா சென்று அடி வாங்கிய பின்னும் இப்படி பேசுகிறார்.