உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 வீரர்கள் பலி

துருக்கி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 வீரர்கள் பலி

இஸ்தான்புல்; துருக்கி ராணுவ விமானம் ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 20 வீரர்களும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு: அஜர்பைஜானில் இருந்து விமானக்குழுவினர் உள்பட 20 பணியாளர்களுடன் ராணுவ விமானம் C - 130 ஒன்று துருக்கிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் துருக்கிக்கு சொந்தமானது ஆகும். அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. மேலும், விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.C-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும், தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கண்ணன்
நவ 12, 2025 09:43

நல்ல செய்தி


raja
நவ 12, 2025 06:26

இந்தியாவும் விமான எங்ஜின்களை இறக்குமதி செய்வதை விட்டு விட்டு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.. அது தான் நமது நாட்டுக்கு பாதுகாப்பு....


Kasimani Baskaran
நவ 12, 2025 03:58

நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் துருக்கிதான் ஐரோப்பாவில் உள்ள பிரதான தீவிரவாத நாடு..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 12, 2025 00:20

சி-130 விமானம் அமெரிக்க லாக்ஹீட் மார்டின் தயாரிப்பு. ட்ரம்ப் பட்டன் அழுத்தினால் இஞ்சின் ஆஃப் ஆயிடும்.தேஜஸ் விமான எஞ்சினுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று விமான வல்லுநர்கள் கூறுகின்றனர்.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 09:21

உலகம் தட்டையானது என்று கூறிய நபர்களை சார்ந்தவர் போல ?


சமீபத்திய செய்தி