உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி

பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன் : பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் கிரம்ப்சால் என்ற பகுதியில் யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு அந்நாட்டு நேரப்படி காலை 9:30 மணியளவில் அங்கு பலர் கூடி வழிபாடு நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வழிபாட்டில் இருந்தவர்கள் மீது கத்தியால் குத்தத் துவங்கினார். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் முதலில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என சந்தேகிக்கப்படுவரை சுட்டுக் கொன்றனர்.அந்த பகுதிக்கு ஆம்புலன்சுகளுடன் விரைந்த மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்து நடந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

lana
அக் 03, 2025 10:37

கர்மா ஒரு பூமராங். அது தனி மனிதன் ஓ நாடு எதற்கும் விதி விலக்கு இல்லை. உலகின் பல நாடுகளிலும் பிரிவினை தூண்டியது இந்த ஆங்கில ஏகாதிபத்திய ம். இன்று திரும்ப நடக்கிறது


naranam
அக் 03, 2025 06:05

வழக்கம் போலத் தான்.. ஜிஹாத் அல் ஷமி என்ற சிரியாவிலிருந்து குடியேறிய கயவன் தான் கொலைகாரன் என்று மான்ச்செஸ்டர் காவல் துறை அறிவித்துள்ளதே! இந்தியாவில் கள்ளத் தனமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷி முஸ்லிம்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மெத்தனமாகவும் அரசியல் ஆதாய நோக்குடனும் செயல்பட்டு வருவது அச்சத்தை அளிக்கிறது.


djivagane
அக் 02, 2025 18:46

MOSSAD work


Field Marshal
அக் 02, 2025 20:05

அமைதி மார்க்கத்தால் மக்கள் கொந்தளிப்பு


Kalyan Singapore
அக் 02, 2025 18:34

கத்தியால் குத்திய நபர் கட்டாயம் மூர்க்க ........ சார்ந்தவராக இருந்திருப்பர் அது வெளியே வரக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் அவரை சுட்டுக்கொன்று விட்டனர் .அவரை கைது செய்து நீதி பீடத்தின் முன் நிறுத்த என்ன தடை ?


Modisha
அக் 02, 2025 18:31

People’s pro against a section of the immigrants in GB has come too late to benefit them. The damage has already been done. Neutrality in religion is not always a good policy.


Thravisham
அக் 02, 2025 19:10

Almost all countries regret granting citizenship. Becz they dont adopt with countries granting their culture. Its ridiculous that European union and USA adopted too many people. Now they r reaping the benefits of naturalization. India MUST ENFORCE CAA & ONE CIVIL LAW


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை