வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம்ம ஆளுக்கு உள்ளூர் சாலை விதிகளே தெரிஞ்சிருக்காது. அங்கு கனடாவில் வான் வழி , விமான விதிகள் எப்புடித் தெரியும்? அடுத்தவன் அட்ஜஸ்ட் பண்ணிப்பான்னு நெனச்சிருப்பாரு.
கனடா: கனடாவில் விமானப் பயிற்சியின் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இந்திய மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் உள்ள விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ்,23 என்பவரும், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் என்பவரும் பயிற்சி பெற்று வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=poe1r0j1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் (ஜூன் 8) இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ., தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர். அந்த சமயம் யாரும் எதிர்பாராதவிதமாக, 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளானது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில், ஸ்ரீஹரி மற்றும் சவானா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
நம்ம ஆளுக்கு உள்ளூர் சாலை விதிகளே தெரிஞ்சிருக்காது. அங்கு கனடாவில் வான் வழி , விமான விதிகள் எப்புடித் தெரியும்? அடுத்தவன் அட்ஜஸ்ட் பண்ணிப்பான்னு நெனச்சிருப்பாரு.