உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரகசா புயல்; சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு: தைவானில் 17 பேர் பலி

ரகசா புயல்; சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு: தைவானில் 17 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்:சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் ரகசா புயல் தாக்கியது. இதில் தைவானில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்.கடந்த 22ம் தேதி முதல் தைவானில் ரகசா புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்தப் புயல் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியையும், ஹாங்காங்கையும் நோக்கி நகர்ந்து வருகிறது. தைவானில் ரகசா புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழை பெய்து வருவதால், தைவானில் உள்ள ஏரி ஒன்றில் உடைப்பு ஏற்பட்டது. இதில், பாலம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குவாங்பு நகருக்குள் புகுந்தது. இதனால், 17 பேரை காணவில்லை. 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த 48 மணிநேரத்தில் சீனாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார், 1.40 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரகசா புயல் இந்த ஆண்டு உலகின் வலிமையான புயலாகும். இது தென் சீனக் கடலில் பல நாட்களாக தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !