உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் 12 கி.மீ. பாலத்தை தகர்த்த உக்ரைன்

ரஷ்யாவின் 12 கி.மீ. பாலத்தை தகர்த்த உக்ரைன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ட்ரோன்களை அனுப்பி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களில் தாக்குதல் நடத்தி, 30 விமானங்களை தகர்த்த உக்ரைன், அடுத்த நடவடிக்கையாக, ரஷ்யாவின் முக்கிய பாலத்தை குண்டுகள் வைத்து தகர்த்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்று ஆண்டைக் கடந்தும் தொடர்கிறது. போர்நிறுத்த பேச்சுகள் தோல்வி அடைந்த நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைனின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.சமீபத்தில், 117 ட்ரோன்களை ரஷ்யாவின் பல பகுதிகளுக்கு அனுப்பி, ஐந்து விமானப்படை தளங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில், ரஷ்ய விமானப்படையின், 30 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இந்தப் போரின் மிகப்பெரிய சேதமாகக் கருதப்படுகிறது.இதற்கிடையே, உக்ரைனிடம் இருந்து, 2014ல் ரஷ்யா கைப்பற்றிய கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் வகையில், 12 கி.மீ., துார பிரமாண்ட பாலம் உள்ளது. கிரீமியன் பாலம் என்றும் கெர்ச் பாலம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இதில், ஒரு பக்கம் ரயில் போக்குவரத்துக்கும், மறுபக்கத்தில் சாலை போக்குவரத்தும் நடந்து வந்தது.இந்நிலையில், நீருக்கடியில், பாலத்தின் துாண்களின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை இயக்கி, உக்ரைனின் உளவு அமைப்பான, எஸ்.பி.யு., நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், பாலத்தின் பெரும்பகுதி தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கடந்த, ஒரு மாதமாக திட்டமிட்டு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, எப்.பி.யு., கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, 1,100 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.இந்த தாக்குதலில், பாலம் மட்டுமல்லாமல், அதை தாங்கி நிற்கும் துாண்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anand
ஜூன் 04, 2025 10:37

ஐரோப்பிய நாடுகள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது......


Saravanaperumal Thiruvadi
ஜூன் 04, 2025 09:53

ரஷ்யா உக்ரைனில் இதை விட பல மடங்கு அழிவை ஏற்படுத்தி இருக்கிறது அதோடு ஒப்பிடும் பொழுது இது சிறிது தான் ரஜினி டயலாக் தான் ஞாபகம் வருகிறது நீ நூறு அடி அடிச்சா நான் இரண்டு அடியாவது அடிப்பேன் என்பது தான்


N Srinivasan
ஜூன் 04, 2025 09:12

உக்ரைனின் போக்கு சரி இல்லை. ரஷ்யா பதில் அடி பலமாகவே இருக்கும். மோடியை போல் நிந்து பதில் தாக்கும் என தெரிகிறது பார்ப்போம்


SUBBU,MADURAI
ஜூன் 04, 2025 07:46

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த போர் விமானங்களின் மீதான தாக்குதலாகட்டும் அதையடுத்து இப்போது நடந்த இந்த ரஷ்ய பாலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதாகட்டும் இந்த இரண்டு பெரும் தாக்குதலை உக்ரைனின் பொம்மை கோமாளி ஜெலன்ஸ்கி என்ற நபரால் மட்டும் நடத்தியிருக்க முடியாது. இதற்குப் பின் அமெரிக்கா அல்லது பிரிட்டன், பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியால்தான் ரஷ்யாவில் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க முடியும். ஆக மொத்தம் இந்த கோமாளி ஜெலன்ஸ்கியை வைத்துக் கொண்டு அவரின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த ஐரோப்பிய நாடுகள் நடத்தும் இந்த போர் ரஷ்யாவின் பயங்கர கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் வரும் காவங்களில் இந்த நாடுகள் அதற்கான பயங்க விளைவை சந்திக்க போகின்றன. அதற்கு முன் இஞ்த கோமாளி ஜெலன்ஸ்கி உக்ரைன் என்ற நாட்டை சுடுகாடாக்கி விட்டுதான் ஓடப் போகிறார்.


மூர்க்கன்
ஜூன் 04, 2025 11:41

அயோக்கியர்கள் இந்தியாவிலும் குழப்பம் விளைவிக்க முயலுகிறார்கள் என்பதுதானே வேதனை.