உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: உற்பத்தி பாதிப்பு

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: உற்பத்தி பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த சுத்திகரிப்பு நிலையம் பற்றி எரிந்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள லெனின்கிராட் பகுதியில் உள்ள கிரிஷி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன்களை வீசியது. இங்கு தான் 1,77 கோடி மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாக இதுஉள்ளது. இதன் காரணமாக அந்த சுத்திகரிப்பு நிலையம் பற்றி எரிந்த காரணத்தினால், எழுந்த புகைமூட்டம் வானை முட்டும் அளவுக்கு எழுந்தது. அங்கு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள உக்ரைன் ராணுவ அதிகாரி, இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில், புகைமூட்டமாக காணப்படுகிறது.அந்த பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ கூறுகையில், உக்ரைன் வீசிய 3 டிரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் உதிரி பாகம் தான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது விழுந்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக அது அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில் இது குறித்து ரஷ்யா அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. ரஷ்யா ஆக்கிரமிப்பு கிரிமீயா பகுதியில் 80 டிரோன்களை உக்ரைன் வீசியதாகவும், அது அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
செப் 14, 2025 21:44

காலப்போக்கில் உக்ரைனில் உள்ள எல்லா தாதுப்பொருள்கள் சுரங்கங்கள் அமெரிக்க அதிபர் டிரம்பு உதவுவதுபோல போர் தளவாடங்களை அனுப்பி அதற்கு விலையிடாக அங்குள்ள சுரங்கங்கள் அமெரிக்க அதிபரிடம் வந்துவிட வழி செய்வார் பிறகுதான் தெரியும் டிரம்பு செய்வது குரங்கு ஆப்பம் தின்ன கதையாக மாறிவிடும் என்று உக்ரைன் அமெரிக்க ஆதிக்கத்திற்கு கிழே வந்துவிடும் இதுதான் டிரம்மில் மகா பெரிய போர் தந்திரம்


ஆரூர் ரங்
செப் 14, 2025 19:32

போர்வெறி பிடித்த புடினுக்கு நல்ல பாடம். உக்ரேன் முழு சுதந்திர நாடாக திகழ வாழ்த்துக்கள். வல்லரசு ஆதிக்கம் இல்லாத உலகம் அமைதியாக நிம்மதியாக இருக்கும்.


Shivakumar
செப் 14, 2025 19:03

உக்ரைனின் நேரம் சரியில்லை . இதற்கு ரஷ்யா மீண்டும் அதிகப்படியான தாக்குதலை உக்ரைனின் மீது நடத்தும். இந்த ஜெலின்ஸ்கி என்ற கோமாளி உக்ரைனை சுத்தமாக அழிக்காமல் விடமாட்டான். டொனால்ட் டக் ஏன் இந்த கோமாளியை ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறான்.


சமீபத்திய செய்தி