உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

மாதம் 100 ட்ரோன்கள் தயாரிப்பு; உக்ரைன் ஸ்டார்ட் அப் அசத்துகிறது

கீவ்:ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், 'ட்ரோன்' உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு மாறியுள்ளன. ரஷ்யாவின் 2022 படையெடுப்புக்குப் பின், உக்ரைன் அரசு ஆண்டுக்கு, 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறது. இதனால் அங்கு நுாற்றுக்கணக்கான ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதில் 'பயர் பாயின்ட்' என்ற நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இரண்டு முக்கிய போர் தளவாடங்களை உற்பத்தி செய்கிறது. ஒன்று எப்.பி., - 1 என்ற வெடிக்கும் ட்ரோன்கள். ஆளில்லா விமானம் எனப்படும் இந்த ட்ரோன்கள் 1,600 கி.மீ., வரை பயணிக்கும் திறன் கொண்டவை. 2வது 'பிளமிங்கோ க்ரூஸ்' ஏவுகணை. இது 3,000 கி.மீ., துார இலக்கை தாக்கக் கூடியது. 2023ல் எப்.பி., - 1 ட்ரோன் உருவாக்கப்பட்ட பின், மாதம் 30 ட்ரோன்கள் தயாரிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை தாண்டி தற்போது மாதம் 100 ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ட்ரோனின் விலை 45 லட்சம் ரூபாய்.

பயர் பாயின்ட் நிறுவன ஆயுத வடிவமைப்பாளர் இரினா டெரெக் கூறியதாவது:

ரஷ்யாவை போல எங்களிடம் அதிக மனிதவளமோ அல்லது பணமோ இல்லை. எனவே வான் வழி தாக்குதல்கள் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி. எப்.பி., - 1 ட்ரோன்கள், 60 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும். ரஷ்யாவுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60 சதவீதம் இந்த ட்ரோன் மூலம் நடந்தவை. அதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதல்களும் அடங்கும். பயர் பாயின்ட் நிறுவனம் தற்போது தினம் ஒரு பிளமிங்கோ க்ரூஸ் ஏவுகணையை உற்பத்தி செய்கிறது. அக்டோபருக்குள் நாளொன்றுக்கு ஏழு ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறனை எட்ட முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
ஆக 24, 2025 12:24

இத்தேர்க்கு ஒரே வழி ரஷ்யா மொத்த உக்ரைன் னும் ஆக்கிரமிப்பதுதான் ஒரு இரு பகுதியை விட்டாலும் அங்க ஆயுதம் தயாரித்து குடைச்சல் கொடுப்பாங்க


தத்வமசி
ஆக 24, 2025 08:45

பிரமாதம். எந்த அறிவியல் கண்டு பிடிப்பும் உலக நன்மைக்காக இருப்பதாக தெரியவில்லை. மாறாக அழிவுக்காக மட்டுமே இருக்கிறது. இப்படியே சண்டையிட்டுக் கொண்டு உலகத்தை அழித்து விடுங்கள். ஜெலன்ஸ்கி ஒரே ஒரு மனிதனின் வறட்டு ஜம்பத்திற்காக இந்த சண்டை நடக்கிறது. அதற்கு தூபம் போடுகிறது பணக்கார நாடுகள். தங்களின் வியாபாரத்திற்காக அதை உலகில் பல நாடுகள் ஆதரிக்கின்றன. இறந்து போவது அப்பாவி பொது ஜனங்கள். இதனால் உலகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க இயலாததாக மாறி விட்டது. இவர்களுக்கு மட்டும் எப்படி பணம் பண மழையாக பொழிந்து ஆறு போல ஓடுகிறது ? கடன் வாங்கினாலும் எப்போது திருப்பி அடிப்பார்கள்? இலவசம் என்றாலும் எப்படி சண்டைக்கு இலவசம் கொடுப்பார்கள்? படித்தவர்கள், பண்பாளர்கள் என்று மார்தட்டும் சமுதாயம் தான் உலகை அழிக்கிறது. இப்படியே பிடிவாதத்துடன் இருந்து உலகத்தை பிச்சைக்காரனாக மாற்றி விட்டு பிறகு எப்படி சமாதானத்திற்கு முன் மொழியலாம், சமாதானம் செய்ய எவன் முன் வருவான் என்று அந்த திசையை தேடுங்கள். அதற்குள் எல்லாம் முடிந்து விடும்.


Jack
ஆக 24, 2025 13:19

நீ இப்படியே புலம்பி காலத்தை கழி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை