உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, அன்டானியோ குட்டரெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பிரச்னையை மேலும் அதிகரிக்கும் செயல் ஆகும். அமெரிக்காவின் தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தான நடவடிக்கை. இந்த மோதல் எல்லையை மீறி செல்கிறது. இந்த தாக்குதல் மக்களுக்கும், உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த ஆபத்தான நேரத்தில், குழப்பமான சூழலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை தீர்வு கிடையாது. ஒரே பாதை ராஜதந்திரம் தான். ஒரே நம்பிக்கை அமைதி தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

என்றும் இந்தியன்
ஜூன் 22, 2025 19:37

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் சண்டை ஏதோ ஒரு பகையினால் அப்போ ஓகே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் சண்டையாம் அமெரிக்க ஈரானில் குண்டு போடுமாம்? டிரம்ப்பே நீங்க பேட்டை ரவுடியா என்ன


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 16:28

கவலை போன உயிர்களை மீண்டும் கொண்டுவராது


Maruthu Pandi
ஜூன் 22, 2025 16:03

முகமதிய ர் இரான் தாக்குதலை ஒன்றுகூடி எதிர்க்க தவறுவது ஏன்?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 16:29

அவர்கள் ஷியா சாதியை சேர்ந்தவர்கள் , பெரும்பாலான அரபு நாடுகள் சன்னி சாதியை பின்பற்றுபவர்கள் ,


KRISHNAVEL
ஜூன் 22, 2025 14:26

நம்ம ஊர் நீதிபதிகளை போன்ற ஐ நா பொதுச்செயலாளர், வலிமையானவர் தவறு எய்யும் போது கவலை மட்டுமே தெரிவிக்க இயலும் ,


SUBBU,MADURAI
ஜூன் 22, 2025 15:15

பல் இல்லாத பாம்பு என்று கூட இவரை அழைக்க முடியாது இது வெறும் மண்புழு மட்டுமே...


பெரிய ராசு
ஜூன் 22, 2025 14:25

வந்த டைய கட்டணுமா கருத்து சொன்னமானு போகணும் இல்லனா உனக்கு ஒரு பங்கர் குண்டு போடணும்


RAJ
ஜூன் 22, 2025 13:51

நீங்க கவலைமட்டுமே படமுடியும் ...வேற ஏதவாது உங்களால் முடியுமா? ..மைனா சே ..நைனா ....இல்ல இல்ல ...ஐநா..


ஃyts
ஜூன் 22, 2025 13:26

ரஷ்யா த நாட்டின் மேல் பல தடைகள் போட்ட பிற நாடுகள் அமெரிக்கா மேல்ஏன் நாட்டில் மேல் போடக்கூடாது ஐநா சபைக்கு அந்த தைரியமும் உண்டா


Shiva
ஜூன் 22, 2025 13:06

U.N is utter waste with no powers. Just giving statement is not U.N work. They ahould forcefully intervene...


Subburamu Krishnasamy
ஜூன் 22, 2025 12:53

United Nation is a dummy organization. Not at all useful to the civilized society. Developed countries will never respond to UN resolutions.


Ramesh Sargam
ஜூன் 22, 2025 12:11

இவ்வளவு வன்மத்தை வைத்துக்கொண்டு நோபல் அமைதி பரிசுக்கு காத்திருந்தார் டிரம்ப். ஒருவேளை அந்த பரிசு கிடைத்திருந்தால் இந்த தாக்குதல் நடக்காமல் இருந்திருக்குமோ?


SANKAR
ஜூன் 22, 2025 13:34

Krishnar too attempted to avoid war and settle for peace.he wanted only oosi munai alavu land Dhoryodgan refused and so Kurukshetra happened.Krishnar not any VANMAM.Similarly enough request made to Iran by Trump


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை