உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் மதுபானங்களுக்கு 150 சதவீதம், விவசாய பொருட்களுக்கு 100 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதை தொடர்ந்து அந்த நாடுகள் எந்தளவுக்கு வரி விதிக்கிறதோ, அந்த அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் எனவும், இந்தியா, சீனா மீதான பரஸ்பர வரி விதிப்பு ஏப்., 2 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறினார். இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விளக்கம் அளித்து இருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியதாவது: இந்தியாவை பாருங்கள். அமெரிக்காவின் மதுபானத்திற்கு 150 சதவீதம் வரி விதிக்கிறது. இது அந்நாட்டிற்கு அமெரிக்க நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு உதவுமா? அப்படி நடக்காது என நினைக்கிறேன். விவசாய பொருட்களுக்கு 100 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. பரஸ்பர வரி விதிப்பில் அதிபர் டிரம்ப்பிற்கு நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அதிபர் தற்போது நமக்கு கிடைத்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

अप्पावी
மார் 13, 2025 11:31

அமெரிக்காவிலிருந்து பாதாம் பருப்பு, ஆப்பிள், ஆரஞ்சு, வால்நட் போன்ற உணவுப் பொருள்கள் அதிகம் இறக்குமதியாகின்றன. பாதாமுக்கு 120 சதவீதம், ஆப்பிளுக்கு 50 சதவீதம், வால்நட்டுக்கு 100 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. இதைத்தான் குறைக்கணும்னு ட்ரம்ப் கேக்கறாரு. சாராய இறக்குமதி மிகவும் குறைவு. நம்ம ஆளுங்களுக்கு உள்ளூர் சாராயமே போதும். உணவுப் பொருள்களின் வரி நிச்சயம் குறைக்கப்படும்.


RAVINDRAN.G
மார் 12, 2025 17:20

மதுவிற்கு அதிக வரிதான் விதிப்பாங்க . உங்க உணவுப்பொருளை குறைந்த வரி விதித்தால் உள்நாட்டு உற்பத்தி செய்வதை யார் வாங்குவார்கள் ஆகவே 100 சதவீதம் வரி சரியானதே . இது புரியாமல் ஹிந்தி 5% ஆங்கிலம் 18% வரின்னு சிலபேர் கருத்து சொல்றாங்க


கத்தரிக்காய் வியாபாரி
மார் 12, 2025 16:12

இதுவே இத்தாலி கொங்கிரஸ் இருந்திருந்தா உடனே அடிபணிதிர்ப்பார்கள். நாட்டுப்பற்று உள்ளவர்கள் யார் என்று தெரியாமல் கருத்து போட்டு பிதற்றுகிறார்கள்.


TRE
மார் 12, 2025 18:07

யார்றா இந்த சங்கீ


अप्पावी
மார் 12, 2025 14:58

ரொம்ப ஓவரா பேசாதம்மா. உங்க பேச்சுக்கு இங்கே ஜி.எஸ்.டி போட்டுருவோம். நிர்மலா ஜீ ரெடியா இருக்காங்க. இந்தில பேசுனா 5 பர்சண்ட், இங்கிலீஷ்னா 18 பர்சண்ட். டாலர்ல கட்டணும். பிரியுதா?


abdulrahim
மார் 12, 2025 14:41

கிராமத்து பாட்டி பின்னி விற்கும் ஓலை கொட்டனுக்கும், குடிசை தொழில் முறையில் தயாரிக்கும் கடலை மிட்டாய்க்கும் 18 சதவிகிதம் வரி விதிச்ச நாங்க உங்க நாட்டு அதிபர் மிரட்டலுக்கு பயந்து உங்க நாட்டு உயர்தர மதுவுக்கு வரி விலக்கு அளித்திருக்கிறோம் தெரியுமா....


Venkatesan
மார் 12, 2025 16:34

சும்மா சலாக்கியோ பிலாக்கீ ன்னு கருத்து சொல்ல கூடாது. உங்கள் தொழில் வருமானம் 20 ளகரங்களுக்கு மேல போனா தான் வரி விஷயமே வரும். அதுலயும் நெறய விஷயம் இருக்கு வரி வராம பார்த்துக்க. தீம்கா அடிமைகளுக்கு பல விஷயம் தெரியுறது இல்லை. ஆனா தீம்கா முதலைகளுக்கு முதலாளிகளுக்கு எல்லாம் தெரியும். சும்மா பொய் சொல்லி சொல்லியே வாழ்க்கையை ஓட்டுறானுங்க...


ஆசாமி
மார் 12, 2025 17:00

லூசு மாதிரி் உளறாத


Sampath
மார் 13, 2025 07:58

Kadalai mittai”, the traditional peanut candy, will be taxed under the 5% slab only in goods and services tax தெரிந்து கொண்டு கருது பதிவிடவும்


குமரி குருவி
மார் 12, 2025 13:44

சரி...சரி... ஓரமாக நின்று ஒப்பாரி வைங்க...


புதிய வீடியோ