உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பனிப்புயல்; 1,800 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயல்; 1,800 விமானங்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவை, 'டெவின்' என்ற குளிர்காலப் புயல் தாக்கியதால், 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 54 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. இதனால் அம்மாகாணம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளப்பெருக்குடன், பல இடங்களில் சேறும் ஆறுபோல பாய்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இந்தநிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களை, 'டெவின்' என்ற குளிர்கால புயல் தாக்கியுள்ளது. இதனால் கனமழையும், கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது.இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வானிலை மோசமடைந்ததால் 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 6,883 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி