வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மிரட்டுவது, கையை முறுக்குவது என்பதற்கு ரௌடிசம் என்று பெயர். ராஜதந்திரம் எனது பெயர் இல்லை.
இதற்கு ஒரு எல்லையே இல்லையா. இவர்களுக்கு யார் பாடம் கற்பிப்பது....
வாஷிங்டன்: ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இவை மிகப்பெரிய தடைகள். அவர்களின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். போர் விரைவில் தீர்க்கப்படும், என்றார்.அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நிரந்தர அமைதி ரஷ்யாவை பொறுத்தது. இன்றைய நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தி துறைகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நிரந்தர அமைதி முற்றிலும் ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மிரட்டுவது, கையை முறுக்குவது என்பதற்கு ரௌடிசம் என்று பெயர். ராஜதந்திரம் எனது பெயர் இல்லை.
இதற்கு ஒரு எல்லையே இல்லையா. இவர்களுக்கு யார் பாடம் கற்பிப்பது....