உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா

ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : உக்ரைனுக்கு 'டொமாஹாக்ஸ்' ஏவுகணைகளை வழங்கவும், ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டாக தொடர்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு நடத்தினார். இருப்பினும், மோதல் முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு டொமாஹாக் ஏவுகணைகளை வழங்கவும், ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குதல் நடத்த தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய் வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவது எளிதாக்கும் என தெரிகிறது.நீடித்த மோதலுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளதால் அதை தகர்ப்பதற்கு குறி வைக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கான வருவாயை கட்டுப்படுத்தினால், உக்ரைன் உடனான போரை புடின் முடிவுக்கு கொண்டு வருவார் என டிரம்ப் கருதுவதால் இது குறித்து பரிசீலித்து வருகிறார்.இதன் ஒருபகுதியாக, நீண்ட துார தாக்குதல்களில் உக்ரைனுக்கு உதவ உளவுத்துறை அமைப்புகளையும், தன் ராணுவத்தையும் அனுமதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.இதேபோன்ற ஆதரவை, 'நேட்டோ' எனப்படும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளும் வழங்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைனுக்கு வழங்க பரிசீலிக்கப்படும் டொமாஹாக்ஸ் ஏவுகணை 2,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது மாஸ்கோவையும், ரஷ்யாவின் மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது. கடந்த வாரம் நியூயார்க்கில் நடந்த ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இதுகுறித்து டிரம்புடன் பேச்சு நடத்தினார். ஆனால், இந்த ஏவுகணை வினியோகம் குறித்து அமெரிக்கா இன்னமும் முடிவு எதுவும் செய்யவில்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
அக் 03, 2025 14:59

ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஐந்தாறு அமெரிக்கத் தயாரிப்பு F16 விமானங்களை அழிந்ததாக நேற்று நமது விமானப்படை தலைவரே கூறியுள்ளார். இப்படிப்பட்ட நாட்டின் தயாரிப்புகளை நம்பி உக்ரேன் நாசமாக போய்க்கொண்டிருக்கிறது. அழிவு ஆயுதங்களை சப்ளை செய்து அமைதிக்கான நோபல் பரிசு கேட்கிறார் ட்ரம்ப்?.


Rajasekar Jayaraman
அக் 03, 2025 12:43

டிரம்பின் போர் நிறுத்தத்தில் மற்றுமொரு மைல்கள் போர் தளவாடா உதவி கண்டிப்பாக இவருக்கு நோபல் பரிசு தரவேண்டும்.


SP
அக் 03, 2025 09:10

அமெரிக்க ட்ரம்பருடன் சேர்ந்து உக்கரணை அழிக்காமல் விட மாட்டார் போலிருக்கிறது ஜெலன்ஸ்கி.


பேசும் தமிழன்
அக் 03, 2025 08:56

இது தான் அமெரிக்கா சண்டையை நிறுத்தும் இலட்சணமா ??


Krishna
அக் 03, 2025 06:01

After Collapse of Soviet Union, Russia became Moderate-Reformer-Powerless While NATO became More Greedy& E.EuropeExpansionist, a Grave Threat to World Peace-Humanity. Hence World Must Destroy NATO Completely


Kasimani Baskaran
அக் 03, 2025 04:06

ஆனால் அமெரிக்க அரசை முடக்கி வைத்து இருக்கிறார்கள். நல்ல நாடகம் போல தெரிகிறது.


Ramesh Sargam
அக் 03, 2025 01:35

டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று நோபல் பரிசு அமைப்பினர் நினைத்தார்கள். அதற்குள் அனாவசியமாக இப்படி உக்ரைனுக்கு ஆயுதம் தந்து போரை தொடர செய்வதால், அவருக்கு நோபல் பரிசு போச்சு.


அருள்மொழி
அக் 03, 2025 00:05

சூப்பர் தல இதுல அமைதிக்கான நோபல் பரிசு வேற தரலனு கோபப்படுறீங்க.....


Varadarajan Nagarajan
அக் 02, 2025 23:14

ஒருபுறம் தான் உலகில் 7 நாடுகளில் போர்களை நிறுத்தியுள்ளதாகவும் அதனால் தனக்கு அவசியம் நோபல் பரிசு கொடுக்கவேண்டுமெனவும் மறுபுறம் பல நாடுகளில் மறைமுகமாக போருக்கு ஆதரவளித்துக்கொண்டும் ஆயுதங்களையும் வழங்கிகொண்டும், தனது சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் செயல்பட்டுக்கொண்டுள்ளார். அமைதியென்பது போரால் கிடைக்காது. பேச்சுவார்த்தைமூலம்தான் கிட்டும்.


Ramesh Sargam
அக் 02, 2025 22:42

இந்த டிரம்ப் இருக்கானே ஒரு பக்கம் 7 போரை தான் நிறுத்தியதாக தனக்குத்தான் அந்த நோபல் பரிசு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பான். மறுபக்கம் போர் தொடர ஆயுதங்களை விற்பான். இவனுக்கு eppadi நோபல் பரிசு கொடுக்கமுடியும்? நீங்களே சொல்லுங்கள்.


முக்கிய வீடியோ