உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரோஸ்டர்... பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம்

ரோஸ்டர்... பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம்

ஆஸ்டின்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தன் 'டெஸ்லா' நிறுவனம் சார்பில், 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் குறுகிய தூரம் பறக்கும் திறன் உடைய காரை நேற்று அறிமுகப்படுத்தினார்.அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனம், மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், பறக்கும் திறன் உடைய, 'ரோட்ஸ்டர்' என்ற புதிய காரை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்தக் கார் சாலையில் அதிவேகமாகச் செல்வதுடன், காற்றிலும் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி 2028ல் தொடங்கும் என நிறுவனத்தின் தலைமைச் நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் உள்ள, 'ஸ்பேஸ்எக்ஸ்' சோதனை மையத்தில், 'ரோட்ஸ்டர்' பறக்கும் காரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது காரின் செயல் விளக்கமும் நடந்தது. இதற்காக செங்குத்தாக மேலே சென்று உட்புறமாக திரும்பும் வகையில் பாதை அமைத்திருந்தனர். காரின் அடிப்பகுதியில் உறிஞ்சு விசை தொழில்நுட்பம் இருந்ததால் செங்குத்தான பாதையில் ஏறி கீழே விழாமல் தலைகீழாக சில விநாடிகள் நின்றது.பின்னர் அந்தரத்தில் சுழன்று காற்றில் சில விநாடிகள் பறந்து, அதிவேக காற்று உந்து விசை உதவியுடன் தரையிறங்கியது. இந்தச் செயல்விளக்கத்தில் காருக்குள் ஓட்டுநர் இல்லை. உயிரிழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓட்டுநர் இல்லாமல் சோதனை நடத்தியதாக மஸ்க் கூறினார்.இருப்பினும், இந்தக் கார் நீண்ட தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. நிகழ்ச்சியில் காட்டப்பட்ட செயல்விளக்கம், கார் காற்றில் மேலே எழும்பி பாய்வதை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது.'ரோஸ்டர்' கார் குறித்து டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியதாவது: 'டெஸ்லா'வின் புதிய 'ரோட்ஸ்டர்' கார், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ., வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் கொண்டது. இந்தக் காரில் 10 உந்து முனைகளும், மிக உயர் அழுத்த காற்றழுத்த தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரையில் காரின் வேகத்தை அதிகரிக்கவும், காற்றில் மேலே எழும்பவும் உதவும்.உலகின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமும், சிறந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து செயல்பட்டதன் விளைவு இந்தத் தொழில்நுட்பம். 2028ல் இந்த காரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vasan
அக் 17, 2026 14:38

இந்தியாவில் இந்த பறக்கும் கார் எப்போது விற்பனைக்கு வரும்? ஆம்புலன்சைகளை இந்த மாடலில் உருவாக்கலாம். டிராபிக் ஜாம் இருக்கும் போது, முன்னர் நிற்கும் வாகனங்களின் மீது பறந்து சென்று, மருத்துவமனைக்கு போய் சேரலாம், உயிர்களை காப்பாற்றலாம்.


manian
அக் 17, 2026 14:02

Elon is a modern day genius.You can expect many more thrilling discoveries from him.


கிஜன்
அக் 17, 2026 09:58

ஐன்ஸ்டீன் அல்லது நியூட்டன் போன்ற ஒரு இயற்பியலாளராக இலானை கருத முடியாது.ல். ராக்கெட், கார், மூளை தொழில்நுட்பம் என எதாக இருந்தாலும், "உலகம் என்ன சொல்கிறது" என்று பார்க்காமல், "அறிவியலின் அடிப்படை விதி என்ன சொல்கிறது" என்று வணிக ரீதியாக சிந்திப்பதே இலான் மஸ்கின் வெற்றிக்கான ரகசியம். முடிந்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். இல்லெங்கில் அரைத்த மாவையே அரைக்கலாம். எடைக்கு நிகரான செலவு (Cost per kg) மற்றும் தொழில்நுட்ப மட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் reusable Falcon 9 ராக்கெட்டுகளே தற்காலத்தில் உலகிலேயே மிக மலிவான மற்றும் லாபகரமான சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


பாமரன்
அக் 17, 2026 09:33

இன்னிக்கு மஸ்ஸுக்க திட்டுறவனுவ பூரா யாரு... நம்ம பயலுவ தான். ரெண்டு வருஷம் முன்னாடி மஸ்க்கு பெரிய ஜிய பார்த்து டெஸ்லா ஃபேக்டரி போட ஒப்பந்தம் பண்ண வர்றாருன்னு நாலு வாரத்துக்கு பேனர் கட்டி வாழ்த்து சொன்னவிங்க தான்... இப்ப கூட நம்ம ஸ்பான்ஸர் அடேஷ்னி கூட பார்டணர்ஷிப்புன்னு சொல்லிட்டா மஸ்க்கு எங்க ரஸ்க்குன்னு கவித பாடி சீனியர் அடேஷ்னிய தொங்கல்ல விட்ருவாய்ங்க... அட அவ்ளோ ஏன்... தோ ஜியோ ஐபிஓ முடிஞ்சி ப்ரீமியத்தில் லிஸ்ட் ஆகவச்சதும் பாருங்க... மத்திய அரசு ஒரு மெகா பல்டி அடித்து மஸ்க்கை ஹாஹாஹா மை ஃபரண்ட் அப்பிடின்னு கட்டி புடிச்சு வரவேற்கும். பகோடாஸ் வழக்கம் போல வாய்க வாய்க வாய்கவேன்னு சப்ளா கட்டைய தூக்கிட்டு வருங்க... இதைத்தானேயா பண்ணெண்டு வருஷமா பாக்குறோம்.... இப்ப இந்த கருத்து வந்தா சிங்கிள் லைன்ல சம்பந்தமில்லாம திட்டுற அப்ரசண்டிக வரும். பார்ப்போம்


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 09:09

அடப்போங்கையா அந்த எல்லாம் மச்ச்ச்ச்சுக்குக்கு இந்த அயுடியாவ எடுத்து உட்டதே எங்க கன்னட தெலுங்க மேதாவி ஈரோடு வெங்கட்டப்ப ராமசாமி - - வந்து - - ரமசாமி தானுங்களே அதே மாதிரி நாசாவிலிருக்கர வான் பிராவுனுக்கு ராக்கிட்டுட் டெக்குனாலஜியக் குடுத்ததும் இவுரேதான் என்னமோ போளச்சுப் போராங்க போன்னு தம்ம்மிளு நாட்டக்காப்பாத்தி ஒப்பேத்தாணும்ங்கர வெறில எங்கூர்ல வந்து குடியேறி கடை பரப்பிக் குப்பை செத்தை எல்லாம் கொட்டி வச்சுது அவுரு


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 08:56

அரைகுறைத் திருடன் மச்ச்ச்ச்ச்சுக்குவின் பறக்கும் காரை வாங்குவதை விடச் சீனாக்காரனின் சிங்கிள் சீட் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கிக் கொள்ளல்லாம் இரண்டும் ஒரேமாதிரித்தான் முதல் டேங்க் கேசோஹால் தீரும் வரை ஓடும் அப்புறம் இறக்கிவிட்டால் எழுந்திருக்காது அப்புறம் பழைய இரும்புக்காரனைக் கூப்பிட்டுக் கேட்டால் "இதெல்லாம் யூஸ் அன்டு துரோ மாரலுங்க வெறும் ஃபைபருச் சமாச்சாரம் கிலோ அம்பது பைசாக்கு எடுத்துக்கரன்" என்பான்


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 08:45

ஏ - ஏ - ஆஹா இவனுடைய ராக்கெட்டைப்போலவே இந்தக்காரும் மெதுவாக மேலே எழும்பி டபக்கென்று கேழே விழுந்து விடும் அற்புதமான லேண்டிங் டெக்னாலஜி உள்ளடங்கினது நமது வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் சாலைப் போக்குவரத்து விதிகளின் மீதான ஞானமும், தெளிவும், காதலும் - - - என்ன சொல்வது இந்த லட்சணத்தில் பறக்கும் கார் வந்தால் "கிளிஞ்சது கிட்ணாவரத்து லிங்கி வேட்டி " சாலையைக் கவ்விப் பிடித்து நூறூ விதமான எச்ச்சரிக்கைப் பலகைகளையும் மீறி, பாதுகாப்புக்களையும் தகர்த்து ஓடும் வாகனங்களால் நிகளும் விபத்துக்களும் உயிரிழப்புக்களும் எவ்வளவு தெரியுமா? 13.5 lakh road accidents occur in a day across the world Sanatan Prabhat › english 17 Jun 2023 ... Sydney Australia – 3,700 people lose their lives in road accidents every day across the world. On average, 13.5 lakh road accidents take place ... உலகளவில், இது, """13.5 lakh road accidents occur in a day across the world Sanatan Prabhat › english 17 Jun 2023 ... Sydney Australia – 3,700 people lose their lives in road accidents every day across the world. On average, 13.5 lakh road accidents take place ..."""


Aarbinms
அக் 17, 2026 06:35

There are few geniuses whos thinking flexibility is 10 times more than regular human beings. In india we had GDN, M.Visveswaraiah, Ramanujam who are far ahead of others.


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 08:05

Sir, Please donot compare this Trump Licker drugster girls trafficker tech prate and illegitimate bloak Mussssk with GND or GRD or Sree Vishweswarayya or Raamaanujan I am an ardent and pet disciple to both GDN Sir and GRD Sir since 1971 GDN chose me to attend Grundig workshop since around th e70s electronics was the craze among the students. GDN assisted my stubborn interest and helped my import some fresh-to-the-field components. GRD introduced me to the budding Computer as early as 1972 and I am still in it all the way up the AI


Rajkumar
அக் 17, 2026 06:34

அண்ணே நம்ப ஊருக்கு தக்காளி அமெரிக்கா கம்பனிக்கு வந்தா ரத்தமா. இப்பவே சோசியல் app வந்து நாறுது இன்னும் அந்த ஒரு ஆளுதான் பாக்கி


கிஜன்
அக் 17, 2026 06:09

எலான் ஒரு ஜீனியஸ்…அவரது அறிவை பயன்படுத்திக்கொள்வோம் என்று சொன்னால் மேலே விழுந்து பிராண்டுகிறார்கள்…. இயற்பியலை நன்கு கற்று அதை வணிகரீதியாக சிறப்பாக பயன்படுத்தியவர்… ரோட்ஸ்ட்டார் சமீபத்திய உதாரணம்


Aarbinms
அக் 17, 2026 06:42

அவரு தன்னுடைய அறிவை பாரதத்தின் அழிவுக்கு வழி வகுக்கிறார்


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 08:20

இந்த அரைகுறை எலான் மச்ச்ச்ச்ச்ச்ச்சுக்கு ஒரு டெக்னாலஜி திருடன் அன்றைய சுய மேதாவி அறிஞர் டெஸ்லாவின் அத்தனை "காலத்திற்கு முந்திய" டெக்னாலஜிகளியயும் கொள்ளை அடித்த திருட்டு மேதாவி எல்லா மேற்கத்திற்க ஜீனியஸ் சயின்டிபிட்டிஸ்க் இன்வென்டர் ஈஞ்சினீர் சுக்குனீய்ர கும்பலும் ஆய்ன்ஸ்டீன் மற்றும் நாசாவின் வன ப்ரான் உட்பட அப்பட்டமான திருட்டுப் பசங்கள் ஆசிய நாடுகளில் இருந்து லவட்டி க் கொண்டு சென்ற தொழில் நுட்பங்கள் தான் அவன்கள் தங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பெயர் வாங்கிய கண்டு பிடிப்புக்கள் நாசாவிலேயே அந்தத் திருட்டுவானியல் மேதாவி வான் பிரான் தான் பாரதத்தில் இருந்து சுட்டுக் கடத்திக் கொண்டு வந்த "ராக்கெட் ஸ்வொர்டு ஐடியா" இற்காக ஒரு நினைவுச் சின்னத்தை நாசாவின் ஹாலில் வைத்திருக்கிறான் நமது அப்துல் கலாமின் "அக்னிச்சிறகுகள்" இல் படித்துப் பாருங்கள் "ஏமா பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா சீருக்கு?" - -நம் நாட்டுக்கு வெளிநாட்டுத் தொழில் நுட்பமேதான் வேண்டுமா? ஏன் நம் நாட்டு மக்கலின் உள்நாட்டுத் தொழில் நுட்பம் எல்லம உங்களுக்கு ஒத்து வராதாமா?


Chandhra Mouleeswaran MK
அக் 17, 2026 08:30

"""இயற்பியலை நன்கு கற்று அதை வணிகரீதியாக சிறப்பாக பயன்படுத்தியவர்… ரோட்ஸ்ட்டார் சமீபத்திய உதாரணம்""" ஆஹாஹா அருமை இன்னும் நிறையப் பழங்கால அறிவியல் ஆவணங்களைப் படியுங்கள் நண்பரே எலான் மஸ்ஸ்ஸ்ஸ்க்கைப் பறறி மட்டும் படித்தால் அவனைப் போலத்தான் மனப்போக்கு அமையும் தி ஃப்ராங்க்ளின் இன்ஸ்டிட்யூட்டின் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் s://fi.edu/en/science-and-education/collection/case-files/nikola-tesla அத்துடன், இங்க்லிஷ் விக்கிப்பீடியாவின் இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள் s://en.wikipedia.org/wiki/Nikola_Tesla


Aarbinms
அக் 17, 2026 08:37

உங்க கருணாநிதியும் ஓர் ஜீனியஸ்தான். அதனால்தான் அண்ணாதொரேயின் கட்சியை லவட்டி தன் குடும்ப கட்சியாக்கி ஊழல்மிகு சாம்ராஜ்யத்தை நிறுவியது.


பாமரன்
அக் 17, 2026 09:37

கரெக்ட் கிஜன். பகோடாஸ்க்கு புடிக்கிதோ இல்லையோ மஸ்க்கு ஜீனியஸ் தான். ஆனா என்ன பண்ண அம்பானி அதானி தான் ஜீனியஸ்... பெரிய ஜி தான் விஷ்வ குரு குசராத்து தான் சொர்க்கம் அப்பிடின்னு சொன்னால் தான் எப்பவும் கனவுல இருக்கும் பகோடாஸ்க்கு புடிக்கும்


முக்கிய வீடியோ