உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹாங்காங் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா முடிவு

ஹாங்காங் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: தேசிய பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, ஹாங்காங்கின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான எச்.கே.டி.,யை தடை செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஹாங்காங்கின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக எச்.கே.டி., உள்ளது. இதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை, அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் எடுத்துள்ளது. எச்.கே.டி., நிறுவனம், பி.சி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பி.சி.சி.டபிள்யூ., நிறுவனத்தில், சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சீனா யூனிகாம் ஹாங்காங் நிறுவனம், 18.40 சதவீதம் ப ங்குக ளை வைத்துள்ளது. இந்த சீன தொடர்பை முக்கிய பாதுகாப்பு அபாயமாக கருதி இந்நட வடிக்கையை மேற்கொண்டுஉள்ளது. இதையடுத்து, எச்.கே.டி., நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நிறுவ னத்துக்கு எப்.சி.சி., கடிதம் அனுப்பி உள்ளது. அமெரிக்க தொலைத்தொடர்புத் துறை அளித்துள்ள விளக்கத்தில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும், 'கிளீன் நெட்வொர்க்ஸ்' என்ற கொள்கையின் ஒரு பகுதி என தெரிவித்து உள்ளது. சீனா யூனிகாம் நிறுவனம் ஏற்கனவே, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த, 2022ல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதே போன்று, 'சைனா மொபைல்' மற்றும் 'சைனா டெலிகாம்' போன்ற சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உரிமைகளையும் எப்.சி.சி., ரத்து செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ