உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் நாட்டு மக்கள் மீது குறி வைக்கவில்லை: சொல்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

ஈரான் நாட்டு மக்கள் மீது குறி வைக்கவில்லை: சொல்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''ஈரான் மீது நடத்திய தாக்குதலில் எங்களது ராணுவம், ஈரான் ராணுவத்தையோ, அந்நாட்டு மக்களையோ குறி வைக்கவில்லை,'' என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. ஈரானின் அணு ஆயுத வளாகங்கள், அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.இந்நிலையில் இன்று ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியதாவது:நாங்கள் அணுசக்தி நிலையங்கள் மீது மட்டுமே துல்லிய தாக்குதல் நடத்தினோம், மக்கள் மீது அல்ல என்று கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:நேற்று இரவு, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், எங்களது படை ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் முக்கிய நோக்கத்தில், அந்நாட்டில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டியோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது நள்ளிரவில் ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தியது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இந்த நடவடிக்கை ஈரானிய துருப்புக்களையோ அல்லது ஈரானிய மக்களையோ குறிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பீட் ஹெக்செத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 23, 2025 04:10

ஈரானுக்கு இஸ்ரேல் மீது அப்படி ஒரு பகை. இதனை குண்டுகள் போட்டும் கதிரியக்கம் சிறிதும் வரவில்லை என்றால் ஈரான் அணுவுலை என்று சொன்னது சுத்தமான பொய். ஆகவே ஒன்று அமெரிக்கா பொய் சொல்கிறது அல்லது ஈரான் படம்காட்டிக்கொண்டு வெற்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருந்தது..


Ramesh Sargam
ஜூன் 22, 2025 21:57

ஈரான் இஸ்ரேல் போர், இப்பொழுது ஈரான் அமெரிக்கா போராக மாறிவிட்டது. உலகில் எங்கு போர் ஏற்பட்டாலும் இந்த அமெரிக்கா மூக்கை நுழைக்கும். ஆனால் அந்நாட்டு அதிபருக்கு நோபல் பரிசின் மீதும் ஒரு ஆசை. இது எப்படி இருக்கு என்றால், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல இருக்கிறது அமெரிக்காவின் அமெரிக்கா அதிபரின் செயல்.


raghasrin
ஜூன் 22, 2025 23:10

America never won any war in the past


புதிய வீடியோ