உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவை அலறவிடும் பனிப்புயல்! கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

அமெரிக்காவை அலறவிடும் பனிப்புயல்! கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல வாரங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இன்டியானா, கெண்டகி, வெர்ஜினியா உள்ளிட்ட பல மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் தொடர்ந்து வீசி வருவதால் கன்சாஸ், மிசௌரி மாகாணாங்களுக்கு கடும் எச்சரிக்கையை வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். பனிப்புயலுடன், பனிப்பொழிவும் வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திலும் கடும் பாதிப்பு காணப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை