உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அறிவித்தது அமெரிக்கா

மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அறிவித்தது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாவில் அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அந்த வகையில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விசாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் விசாவின் மூலம் வெளிநாட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியாது. அதேபோல, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும். மேலும் விண்ணப்பித்தால் 240 நாட்கள் கூடுதலாக தங்கலாம். அதேவேளையில், சீன பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது. இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:மிக நீண்ட காலமாக, கடந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. வரி செலுத்தும் மக்களின் பணத்தை கணக்கிட முடியாத அளவிற்கு வீணாக்குகிறது. இது அமெரிக்க குடிமக்களுக்கு பாதகமாக உள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vaiko
ஆக 28, 2025 22:38

இனி இந்திய மாணவர்கள் அமெரிக்கா செல்வதை தவிர்க்க வேண்டும்


Santhakumar Srinivasalu
ஆக 28, 2025 18:43

படிப்பு மற்றும் வேலை விசியமா தங்கினால் பைத்திய பெரியண்ணனுக்கு ஏன் கொடைகிறது?


ஆரூர் ரங்
ஆக 28, 2025 17:40

அன்னிய நாட்டு மாணவர்களை நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை மூட வேண்டியிருக்கும்.


V RAMASWAMY
ஆக 28, 2025 17:39

Self Destruction activities.


Narayanan
ஆக 28, 2025 16:30

ட்ரம்ப் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் . இல்லையெனில் அமெரிக்கா காணாமல் போய்விடும்


Kumar Kumzi
ஆக 28, 2025 15:37

மோடிஜி அவர்களே இங்கிருக்கும் பங்களாதேஷ் பாகிஸ்தான் கள்ளக்குடியேறிகளை உடனடியாக நாடு கடத்துங்கள் போராட்டம் பண்ணினால் அந்த தேசத் துரோகிகளையும் சிறையில் அடையுங்கள்


V K
ஆக 28, 2025 14:30

விடிந்தால் போதும் சின்ராசு எதாவது பேனாகிட்டு இருக்கும்


Sudha
ஆக 28, 2025 14:13

Very good sensible move. Let India benefit out of such restrictions. Jai Bharat


Murthy
ஆக 28, 2025 14:05

அமெரிக்க பொருட்களை இனியும் வாங்கவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்க வேண்டும் . ....


K.Ravi Chandran, Pudukkottai
ஆக 28, 2025 14:02

உலகம் பூரா அதிபருங்க இருக்காங்க இந்த ஒரு அதிபருக்கிட்ட மாட்டிக்கிட்டு இந்த உலகம் படுற பாடு இருக்கே?