உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி; அவர் சொல்வது இது தான்!

இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி; அவர் சொல்வது இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் வருகையாகும்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் இந்தோ-பசிபிக் பகுதிக்கு பல நாடுகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்குச் செல்வேன். மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் வழியில் பிரான்சிற்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம். பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
மார் 11, 2025 18:44

இந்தியாவிற்கு முதன் முதலில் வரும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி அவர்களுக்கு ஒரு நல்ல கருந்துளசி செடியை நமது பாரத பிரதமர் கொடுக்க வேண்டும்.இது நட்பை வளர்க்கும் துளசி போன்று அரசியலில் ஒரு மருந்தாக ஜனாதிபதி டிரம்பு பயன்படுத்துவார்


Nachiar
மார் 11, 2025 17:56

துள்சி இந்திய வம்சாவழி வந்தவர் அல்ல. அவர் ஒரு இந்து, அவரின் பெற்றோரைப் போல் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை பின்பற்றுபவர். ஜெய் சிவாராம்.


சண்முகம்
மார் 11, 2025 12:45

இவர் ஒரு கெளடிய வைணவத்தை சேர்ந்தவர். ஹரே ராமா ஹரே கிருஷ்ண ஈர்ப்பால இந்துவானவர். அமெரிக்க சமோவாவில் பிறந்த இவர் ஹவாயில் வளர்ந்தவர். ஜனநாயக கட்சியில் இருந்த இவர் ட்ரம்புக்கு சிங்கி அடித்து குடியரசு கட்சிக்கு தாவினார். ட்ரம்பின் கடைக்கண் பார்வையால் பதவியும் பெற்றநம்பத்தகுந்தவர் இல்லை.


Gopinathan S
மார் 11, 2025 13:44

உண்மை. அதனால் தான் இங்கே செய்தி வெளியாகிறது.


Ramesh Sargam
மார் 11, 2025 12:34

நீங்கள் தமிழக முதல்வரை சந்திப்பதை தவிர்க்கவும். ஒரு எச்சரிக்கைதான்.


Gopinathan S
மார் 11, 2025 11:56

இந்த வம்சாவளி பீற்றல் என்று தீருமோ...என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?


Srinivasan Krishnamoorthy
மார் 11, 2025 11:23

she will deal with anti national, anti india forces who were all funded by US deep state, biden/obama government earlier. Good time for india under trump.


Oru Indiyan
மார் 11, 2025 10:58

இங்குள்ள பப்புவும் அவரின் சகோதரியும் உங்களை ரகசியமாக சந்திப்பார்கள்.


VNS
மார் 11, 2025 09:45

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இல்லை . அமெரிக்கர், அவரது தாய் ஹிந்து மதத்துக்கு மாறியவர்.


Kumar Kumzi
மார் 11, 2025 09:30

நீங்கள் இந்திய வம்சாவளியாக இருந்தாலும் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்குறீங்க இங்கே ஒரு துண்டுசீட்டு கோமாளி இருக்கார் பணத்துக்காகவும் பதவிக்காகவும் இந்திய நாட்டையே காட்டிகொடுக்க தயங்க மாட்டார் மேடம்


ramesh
மார் 11, 2025 09:53

தங்களை பற்றி மிகவும் புகழ்ந்து கருத்து போட்டு இருக்கிறீர்கள்


Anand
மார் 11, 2025 10:29

திருட்டு திரவிடிய பரம்பரை....


RAMESH
மார் 11, 2025 15:21

காங்கிரஸ் ஆட்சியில் நமது தேசத்தையே திவாலாக நினைத்த நிதி அமைச்சர் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை சவுதிக்கு விற்று அது பத்திரமாக பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று நாம் கரன்சிக்கு பேப்பர் வாங்கும் அதே இடத்தில அவர்களுக்கும் அதை கிடைக்க செய்து நாட்டில் வெகு தாராளமாக பண புழக்கத்தை ஏற்படுத்த முயன்றதை என்ன என்று சொல்வது. காஷ்மீரில் நமது ராணுவத்தின் மீது தொடர்ந்து கல் ஏறி சம்பவம் நடந்த சமயம் அவர்களுக்கு இந்த பணம்தான் பாகிஸ்தானிய ராணுவம் தொடர்ந்து வழங்கியுள்ள நிகழ்வை நாம் மறக்க முடியாது .


Ram Moorthy
மார் 11, 2025 08:57

அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகவும் நல்ல விஷயம் நல்ல நட்புறவு தொடர வேண்டும் இன்னும் ஆழமாக.


சமீபத்திய செய்தி