உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆக.27 முதல் இந்தியப்பொருட்கள் மீது 25% அபராத வரி அமல்: அமெரிக்கா அறிவிப்பு

ஆக.27 முதல் இந்தியப்பொருட்கள் மீது 25% அபராத வரி அமல்: அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% அபராத வரி ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய- - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ல் இருந்து அமலில் உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி அமலுக்கு வருமா? நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=izbj4e2u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரத்தில், ரஷ்ய கச்சா எண்ணெயை தேசிய நலன் மற்றும் சந்தை விலை அடிப்படையில் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஆதரவு கோரி அந்நாட்டு எம்.பி.,க்களை அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார்.இந்நிலையில் இன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Mubarak ali Mohammed
ஆக 27, 2025 12:50

அமெரிக்காவிற்கு ஒரு தருதலை...


ஆரூர் ரங்
ஆக 26, 2025 16:53

ஐம்பது அறுபது எழுபதுகளில் இந்தியா ஏழை நாடாக இருந்த போது PL480 திட்டத்தின் கீழ் யுஎஸ் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை இலவசமாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது. இந்தியர்களை பிச்சைக்காரர்களைப் போல எண்ணியது. அதே இந்தியா இப்போது பல உணவுப் பண்டங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆகிக்கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாமல் பெரியண்ணன் ஆட்டம் ஆடுகிறார்.


Narayanan
ஆக 26, 2025 16:17

அமெரிக்கா வாழ்வாதாரம் கேடுகெட்ட திசையில் செல்கிறது . அந்தநாட்டு மக்கள் பாவம் கூடுதல் சிலவு செய்யவேண்டும் .பொருட்களின் விலைவாசி விண்ணை தொடும் தூரம் .


Nathan
ஆக 26, 2025 15:58

தயவுசெய்து எந்த ஒரு ஏற்றுமதி நிறுவனமும் தங்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விலை குறைப்பு செய்து விற்பனை செய்ய வேண்டாம். முடிந்தவரை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ளலாம் அல்லது உற்பத்தியை குறைத்தோ அல்லது இந்திய சந்தையில் விலை குறைவாக விற்பனை செய்து தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். இப்போது விலையை குறைத்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தால். தொடர்ந்து அவர்கள் இந்தியாவை நசுக்கி சாறு பிழிந்து கொள்ளை லாபம் பார்க்க ஏதுவாக ஆகிவிடும்.


joe
ஆக 26, 2025 15:43

அமெரிக்க டாலரின் மதிப்பு ட்ரம்பட் கையில் இல்லை .ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார சுழற்சியில்தான் அமெரிக்க நாட்டின் டாலரின் மதிப்பு நிர்ணயமாகிறது .சீனா காலம் காலமாக ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தில் பெரும் பொருளாதாரத்தைக்கொக்ண்டுள்ளது .அதனால் அமெரிக்கா சீனாவை ஒன்றும் செய்துவிட முடியாது .அதைப்போல நாமும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தில் முழு கவனமும் செலுத்தவேண்டும்


venugopal s
ஆக 26, 2025 15:33

இந்த அகங்கார, ஆணவம் பிடித்த மத்திய அரசுக்கு பாடம் புகட்ட சரியான ஆள் ட்ரம்ப் தான்!


vivek
ஆக 26, 2025 20:49

ரோட்டில் அலையும் காலம் நெருங்கிவிட்டது


SP
ஆக 26, 2025 13:56

அமெரிக்க மக்களை பிச்சை எடுக்க வைக்கவிடாமல் விட மாட்டார் போல இருக்கிறது


Nathan
ஆக 26, 2025 12:35

இன்றிலிருந்து ஒரு வருடம் இந்த வரி உயர்வை வைத்து இருந்து பார்த்தால் தெரியும் யார் யாரை நம்பி இருக்கிறார்கள் என்று. எங்கள் நாடு சுயசார்பு பொருளாதாரம் கொண்டது உங்களுக்கு பொருளை விற்கவில்லை என்றால் லாபம் மட்டுமே ஏற்றுமதியாளருக்கு நஷ்டம் உற்பத்தி செய்த பொருட்களை வேறு நாடுகளுக்கு அல்லது உள்நாட்டு சந்தையில் விலை குறைவாக கூட விற்பனை செய்து கொள்வார். பொருட்கள் கிடைக்காமல் அல்லது உயர் விலையில் வேறு நாடுகளில் நீங்கள் பொருள் வாங்க வேண்டியதுதான் உன்மையான நஷ்டம் உங்களுக்கு தான். எந்த ஒரு ஏற்றுமதி நிறுவனமும் உடனடி தேவைக்கு கூடுதல் விலை சொல்லி தான் விற்பனை செய்வார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்


Nathan
ஆக 26, 2025 12:01

இன்றிலிருந்து ஒரு வருடம் இந்த வரி உயர்வை வைத்து இருந்து பார்த்தால் தெரியும் யார் யாரை நம்பி இருக்கிறார்கள் என்று. எங்கள் நாடு சுயசார்பு பொருளாதாரம் கொண்டது உங்களுக்கு பொருளை விற்கவில்லை என்றால் லாபம் மட்டுமே ஏற்றுமதியாளருக்கு நஷ்டம் உற்பத்தி செய்த பொருட்களை வேறு நாடுகளுக்கு அல்லது உள்நாட்டு சந்தையில் விலை குறைவாக கூட விற்பனை செய்து கொள்வார். பொருட்கள் கிடைக்காமல் அல்லது உயர் விலையில் வேறு நாடுகளில் நீங்கள் பொருள் வாங்க வேண்டியதுதான் உன்மையான நஷ்டம் உங்களுக்கு தான். எந்த ஒரு ஏற்றுமதி நிறுவனமும் உடனடி தேவைக்கு கூடுதல் விலை சொல்லி தான் விற்பனை செய்வார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்


Sekar
ஆக 26, 2025 11:31

நாம் உலக அரங்கில் அதிகம் பேசுவதை தவிர்த்து விரைந்து செயல் படவேண்டிய நேரமிது. இவர்கள் பிரிக்ஸ் கூட்டமைப்பை பிரித்தெடுத்து இவர்கள் டாலர் புழக்கத்திற்கென எந்த அளவு வேண்டுமானால் செல்வார்கள் என்பதை உணர்ந்து தயாராக இருக்க வேண்டும்.


மூர்க்கன்
ஆக 26, 2025 13:49

நாம் உலக அரங்கில் அதிகம் பேசுவதை தவிர்த்து விரைந்து செயல் படவேண்டிய நேரமிது. ஜெய் சங்கர் கேட்டுச்சா??


புதிய வீடியோ