உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா குற்றச்சாட்டு

இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்( யுஎஸ்சிஐஆர்எப்) என்ற அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது.இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது.இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் லோக்சபா தேர்தல் நேரத்தில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டி உள்ளது.இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய மன நிலையை அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. ஒரு நாடாக இந்தியாவை அவமதிக்கும் செயல். இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கம். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sankar J
மே 10, 2024 13:10

அமெரிக்கா இந்தியாவின் விஷயங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்


Seshaderi
மே 09, 2024 12:53

அமெரிக்காவுக்கு திறமையிருந்தால் சீனாவின் மதச்சுதந்திரத்தை ஆய்வு செய்து பார்க்கட்டும்,


அப்புசாமி
மே 09, 2024 12:49

ரஷ்யாவின் கவலை நமக்கு கவலையளிக்கிறது.


hari
மே 09, 2024 14:43

அப்போ உனக்கு டாஸ்மாக் செலவு அதிகம்னு சொல்லு கோவாலு


Ramesh Sargam
மே 09, 2024 12:08

இந்திய விவகாரங்களில் தேவையில்லாமல் அமெரிக்க மூக்கை நுழைப்பதை உடனே நிறுத்திக்கொள்வது சாலச்சிறந்தது


vaiko
மே 11, 2024 02:43

நம்மவா முதலில் அமெரிக்கா செல்வதெற்கு துடித்துக்கொண்டு இருப்பதை முதலில் நிறுத்த வேண்டும்


S.Bala
மே 09, 2024 11:59

இந்தியா மட்டும் அல்ல ,அனைத்து உலக நாட்டிலும் பஞ்சாயத்து செய்கிறது


ஆரூர் ரங்
மே 09, 2024 11:45

ஈரானிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு குடியுரிமை தர சட்டம் கொண்டு வந்த பெரியண்ணன் அதில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படாது என்றாக்கிவிட்டது மறக்காது . ஊருக்கு CAA எதிர்ப்பு உபதேசம்.


ஆரூர் ரங்
மே 09, 2024 11:43

தொண்ணூறுகள் வரை கூட இந்தியாவை அடிமையாக வைத்திருந்த வரலாறு ரஷியாவுக்கு மறந்துவிட்டது இந்தியாவின் தலைநகர் மாஸ்கோ என சோ ஆதாரப்பூர்வமாக தொடரே எழுதினார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை